பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25ᏮᏲ திருக்குறட் குமரேச வெண்பா வாழ்க்கைகள் பின்பு ஏன் சீரழிந்து போயின; எனின, அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்ருக் கெடும் என்க. இது, அளவு அறிந்து வாழுக என்கிறது. தன் பொருள் அளவின் கிலேயறிந்து வாழாதவனது குடிவாழ்க்கை இருப்பது போலத் தோன்றிப் பின்பு யாதும் இல்லாமல் ஒழிந்து போம். கெடும் என்று அச்சுறுத்தியது, செட்டும் சிருமாய் வாழ்ந்துவர வேண்டும் என்பதை ஒர்ந்து உணர. உயிர் உடலோடுகூடி உரியகாலம் வரையும் வாழ்ந்து வருவது வாழ்க்கை என வந்தது. இந்த வாழ்க்கை வள மாய்ச் சிறந்து செழித்துவருவது பொருளாலாம். குறை வதும் தேய்வதும் மறைவதும் பொருளின் இயல்பாம். ஒருநிலையிலின்றி மாறுபட்டுத் திரிந்துவருகிற பொருளே ஆனவரையும் சிதைந்துபடாமல் சிரோடு பேணிக் காப் பது பெரிய அறிவுடைமையாம். முன்னும் பின்னும் எண்ணி நோக்கி வரவு செலவு களேச் சீர்தூக்கி அறிந்து செய்வன செய்து தவிர்வன தவிர்ந்து செம்மையாய் வாழ்ந்துவருபவரே அளவறிந்து வாழ்ந்தவராவார்; அவ்வாறின்றி, எதையும் சரியாய்க் கவனியாமல் வீணான ஆடம்பரங்களே விழைந்து விண் செலவுகளேச் செய்து வீண்பொழுது போக்கி வருபவர் அ ள வ றி ந் து வாழாதவராகின்ருர். ஆகவே வளம் இழந்து அவர் விரைந்து இழிந்து கெட நேர்கின்ருர். வாவுக்கு மிஞ்சிய செலவால் வாழ்வு தாழ்வுறும். அந்த மனிதனும் மதிப்பிழந்து இழிந்து படுவான். ஆன முதலில் அதிகம் செலவானுன் மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளனுய் ஏழ்பிறப்பும் தீயளுய் நல்லார்க்கும் பொல்லனும் நாடு. (நல்வழி 25) வரவுக்குத் தக்கபடி செலவு செய்: அதிகமாய்ச் செய்தால் உன் மானம் அழியும்; மதிப்புக் கெடும்: