பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2568 திருக்குறட் குமரேச வெண்பா அவள் பால் இவன் பெருமோகங்கொண்டான். அவளது. மோகவலேயில் சிக்கிப் போக வெள்ளத்தில் மூ ழ் கி க் களித்தான்: பொருள் முழுவதையும் மருளய்ை அள்ளிக் கொடுத்தான். இவனது நிலைமையை அ றி ங் த து ம் அளகை மன்னன் பதவியைவிட்டு விலக்கினன். சிறந்த மங்திரி பதவியையும் நிறைந்த செல்வ வளங்களேயும் ஒருங்கே யிழந்தான். மதிப்பும் மானமும்போய் மறுகி. யலேந்தான். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை அடி யோடு கெடும் என்பதை உ ல க ம் அறிய இவன் உணர்த்தி நின்ருன். இவனது நிலையை நினைந்து பலரும். இரங்கினர். விரிவை மறைசைமான் மியத்தில் காண்க. கோவலன். இந்த வணிகர் குலமகனிடம் அரிய பல குணநலன் கள் அமைந்திருந்தன. உலகம் காக்கும் காவலரும் ஆவ லுறும்படியான பெருந்திருவுடையவன். கண்ணகி என் னும் பெண்ணரசியை மணந்து கண்ணியமாய் வாழ்ந்து வங்தான். இந்த மணமக்களுடைய காட்சி அதிசய மாட்சியாய் மருவி யிருந்தமையால் உலக ம க் க ள் இவரை உவந்து வியந்து பலவாறு புகழ்ந்து வந்தனர். மண் தேய்த்த புகழின்ை; மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால் கொண்டேத்தும் கிழமையான்; கோவலன் என்பான் (மன்குே: போதிலார் திருவினுள் புகழுடை வடிவென்றும், தீதிலா வடமீனின் திறமிவள் திறம் என்றும், மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குனத்துக் காதலாள்; பெயர்மின்னும் கண்ணகிஎன் பாள் மன்னுே. இன்னவாறு கன்னயமாய் வாழ்ந்து வந்தவன் அயல் மாதுமேல் மயல்மீக் கொண்டான். அதனல் செல்வம் எல்லாம் இழந்தான். அல்லலுழந்தான்: அ ய லி ட ம் போய்ப் பிழைக்கலாம் என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறி மதுரையை அடைந்தான். தனது