பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2573 மணந்து இ னி ய போகங்களே நுகர்ந்து எவ்வழியும் இன்பச் சுவைகளில் திளேத்து வந்தான். அருங்தல் பொருந்தல்களே உயர்வாக் கொண்டு இந்த உலகத்தில் அனுபவித்து வருகிற போக சுகங்களே யன்றி வேறு முத்தியின்பம் உ ண் டு என்பது புத்தியின்மையாம் என்று எ ங் கு ம் இவன் புத்தி போதித்து வந்தான். உலகாயதம் என்னும் மதக்கொள்கைக்கு இவன் மூல முதல்வனுய் முன் நின்ருன். இவனது அறிவுகிலே வறிதே உலக விசித்திரமாய் நிலவி எங்கும் பரவி வந்தது. கண்களால் நேரே நாம் கண்டுகளித் துவக்கின்ற காட்சி யின்பம், பெண்கள் பால் நுகர்கின்ற பேரின்பம், இவையன்றிப் பிறிது வேறே எண்களால் உண்டென்று மருண்டெண்ணும் மறுமை,முத்தி என்ப எல்லாம் மண்கள் பால் அறியாத மானுடர்தம் மருளான மடமை யாமே. (சார்வாகம்) இவ்வாறு கருதிவந்த இவன் அறிவிலும் திருவிலும் ஆற்றலிலும் வேறு எவ்வகையிலும் தான் சிறந்தவன் என்று எண்ணி இறுமாந்திருந்தான். யாரேனும் தன்னே வியந்து புகழ்ந்து பேசில்ை அவர்க்கு யாவும் வாரிக் கொடுப்பது இவனிடம் வழக்கமாய் வளர்ந்திருந்தது. தற்புகழ்ச்சியில் தன்னே மறந்திருந்தமையால் பலரும் வந்து பலவகையிலும் நயந்து மொழிந்து இவன் பொரு ளேக் கவர்ந்து போயினர். முடிவில் வறியனுயின்ை. அரசதிருவை இழந்து வறுமையடைந்த இவன் பின்பு மறுகி நொந்தான். அளவு அறியாமல் செலவு செய்ய நேர்ந்தவன் குடி விரைந்து கெடும்; மிடி படிந்து மடிந்து போம் என்பதை இவன் நெடிது விளக்கி கின்ருன். அரிச்சந்திரன். சத்திய சீலனை இந்த உத்தமன் உயர்ந்த குண நலன்கள் நிறைந்தவன். எவ்வழியும் செவ்விய பெருக் தகையாளன். வசிட்ட முனிவரோடு வாதாடி வன்சினம்.