பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2579 காலமும் இடனும் அறிந்தமர் செகுத்தல் கடன் எனக் கருதினர் அன்றே. (பாரதம்: 18) மேலே நிகழ்ந்துள்ள கூகையின் வெற்றி கிகழ்ச்சி களே இது நேரே நன்கு விளக்கியுள்ளது. முன்பு காகம் வென்றதைக் கண்டோம்; இங்கே கூகை வென்றுள்ளதைக் காண்கின்ருேம். காக்கைகளுக் குப் பகலில்தான் கண் தெரியும்; இரவில் தெரியாது; கூகைக்கு இரவில் நன்ருகக் கண் தெரியும் ஆதலால் அங்தக் காலம் அதற்கு வெற்றியைத் தந்தது. இந்த விசித்திர நிலைகள் காலத்தின் வலிமைகளே ச் சாலவும் தெளிவுறுத்தியுள்ளது. காகம் கூகைகளிடமிருந்து கால கலனே யுணர்ந்து வேந்தரும் விவேகம் அடைந்துள்ளனர். உருவக் கோயிலுள் இரவுக் குறிவயின் வெருவக் குழறிய விழிகட் கூகைக் கடுங்குரல் அறியாள் கதுமென நடுங்கினள் ஒடுங்கீ ரோதி. (பெருங்கதை 3 - 22) கூகை இரவில் கூவுவது: கடுங்குரலுடையது; விழி கண் உடையது; இருளில் பொருளறியும் வலியினது என்பதை இ த ன ல் ஈண்டு அறிந்து கொள்கிருேம். உரிய பொழுதில் இகல் வெல்லும் இயல்பினேயுடை யது ஆதலால் இது இங்கே தகவாய் அறிய வங்தது. வரியு டற்பொறி மாசுன வாய்ப்படு மதம்பாய் கரியை மீட்டவன் கைப்படை தொலேந்த காலத்து நரியின் வாய்த்தசை மீட்கவும் வலியின்றி நலிவான் பரிய கூகையை வெல்லுமே காகமும் பகலில். (திருக்குற்ருலப் புராணம், 17) பெரிய கரியை வெல்ல வல்லவன் கால வேற்றுமை யால் சிறிய நரியையும் வெல்ல முடியாமல் கின்ருன். அங்கிலேக்குப் பகலில் வலியும் இரவில் மெலிவுமுடைய காகத்தை உவமையாக இது காட்டியுளது. பகல் வெல் லும் கூகையைக் காக்கை என்னும் தேவர் வாக்கைப் பலரும் உரிமையோடு உறவாய்ப் போற்றியுள்ளனர்.