பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2585. காலம் கழிவது மனிதனுடைய வாழ்நாள் கழிவதாம்: ஆகவே இந்த அரியபொழுதை வீணேபழுதுபடுத்தாமல் உரிய பருவத்தே செல்வம் புகழ் புண்ணியங்களேச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்துகொள் பவரே அறிவு நலம் உடையராய் உய்தி பெறுகின் ருர். கால மான கழிவதன் முன்னமே ஏலு மாறு வணங்கி நின்று ஏத்துமின்! மாலும் மாமல ராைெடு மாமறை நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. (தேவாரம்) காலம் கழியுமுன்னரே பரமனை எண்ணிப் பரகதி பெறுங்கள்; அதுவே பிறவியின் பெரிய பயன் என்று அப்பர் இப்படி ஆர்வத்தோடு அருளியுள்ளார். காலமும் நாள்கழி யும் நனி பள்ளி மனத்தின் உள்கிக் கோலம தாய வனே க்குளிர் நாவல ஆரன் சொன் ன மாலே மதித்துரைப் பார்மண் மறந்துவா ைேருலகில் சால நல் இன்பம்எய்தித் தவலோகத் திருப்பவரே. (தேவாரம்) காலம் வினே கழியாதபடி நளிைபள்ளி என்னும் பதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானேச் சிங்தியுங் கள். பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்பம் பெறுவீர்: இதனே மறந்து விடாமல் விரைந்து புரியுங்கள் என்று சுந்தரமூர்த்தி காயனர் இங்ஙனம் போதித்திருக்கிரு.ர். பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனேப் படைத்த பரமன். (தேவாரம்) இறைவனே இவ்வாறு திருஞானசம்பந்தர் குறித்துக் காட்டிப் பருவம் தவருமல் உய்ய உரைத்திருக்கிரு.ர். உற்ற சமையத்தில் வந்து அன்பர்க்கு உ த வு ம் கம்பன், அவனே நம்பி நலம் பெறுங்கள் என்று அருளி யுள்ளார். பருவத்தோடு ஒட்ட ஒழுகலைக் கடவுளும்கூடக் கடைப்பிடித்திருக்கிருர். இதனே உணர்ந்தாவது காலம் அறிந்து ஒழுகிக் கருமம் புரிந்து மனிதர் கதிபெற வேண்டும் என்னும் மதிநலம் இதில் மருவியுள்ளது. 324 =