பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2587 திருவைப் பெற்று மகிழ்ந்தான். பருவத்தோடு ஒட்ட ஒழுகுபவர் திருவினைத் தீராமல் சீரோடு ஆக்கிக் கொள் வர் என்பதை உலகம் இவன் பால் நோக்கி வியந்தது. நீதியா நின்ற பதினுலாம் நாள்தன்னே ஆதி அமாவாசை ஆக்கலாம்-சோதிமதி ஆதித்த ைேடே அமர்ந்திருக்கும் வேதியரால் சாதித்துக் கொள்வதுகாண் சார்வு. (பாரத வெண்பா) களப்பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான் தனக்குநேர்ந் திடவும் கிளப்பருந் திதியை மயக்கிவான் மதியம் கிளரொளி அருக்கனே க் கேட்ப வளப்படுந் திதியில் முந்துற எமக்கே வழங்கிடும் படிமதி கொளுத்தி உளப்பொலி வுடனே விசயனுக் கருளால் உருளுடைக் கொடிகொள் தேர் ஊர்ந்தாய்! (பாரதம் 17-ம் போர்) காலம் கருதிக் கண்ணன் செய்து முடித்துள்ள கரும வீரத்தைத் தருமன் இவ்வாறு வியந்து புகழ்ந்து மகிழ்ந்து துதித்துள்ளான். பருவம் தவருமல் வினே செய்தமையால் அரச திரு தலைமையான உரிமையுடன் கிலேயாக நேர்ந்து நீங்காமல் நன்கு நிலவி நின்றது. உரிய பருவத்தை ஒர்ந்து வினைசெய் அரிய திருவாம் அது. தக்க பருவத்தைத் தவற விடாதே. 483. சென்றரிய தெவ்வெயிலேச் செம்பியன் வென்றுமுன் குன் ருதேன் நின்ருன் குமரேசா-என்றும் அருவினை என்ப வுளவோ கருவியான் காலம் அறிந்து செயின். (ங்) இ-ள். குமரேசா! செயற்கு அரிய வினேயைப் பருவம் அறிந்து செம்பியன் ஏன் செய்து முடித்தான்? எனின்,