பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2589. கொண்டு தேர்ந்து செய்தால் எத்தகைய கருமங்களும் எளிதே முடியும். வெற்றி வீறுடன்அவர் விளங்கிநிற்பர். அருவினே என்றது பிறர் செய்தற்கு அரியது என அதன் அ ரு ைம யு ம் பெருமையும் தெரிய நின்றது. உளவோ? என்ற வி ைசெய்ய முடியாத காரியம் யாதும் இல்லே என்பதைக் குறிப்பால் உணர்த்தியது. கருவி என்றது வினேயை நன்கு செய்து முடித்தற்கு உரிய உபகரணங்களே. உழுதற்கு ஏர், அரிதற்கு அரி வாள். எழுதுதற்குக் கோல், நடத்தற்குக் கால் போல் வினேக்கு வேண்டிய கருவிகளே நயமாக நாடிக்கொண்ட போதுதான் அது எளிதாய் இனிது முடிந்து வரும். உற்ற கருவிகள் உறுதியாய் அமைந்தாலும் உரிய காலத்தை ஒர்ந்தே வினேசெய்ய வேண்டும். பருவம் தோய்ந்து வினே செய்த போதுதான் கருதிய கருமம் எவ்வழியும் இனிமையாய்ப் பயன் தோய்ந்து வரும். காலம் அறிந்தாங் கிடம் அறிந்து செய்வினையின் மூலம் அறிந்து விளைவறிந்து-மேலும்தாம் சூழ்வன சூழ்ந்து துனைமை வலிதெரிந்து ஆள்வினே ஆளப் படும். (நீதிநெறி 52) வினே செய்ய வேண்டிய வித்தக நிலைகளே இதில் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். கருவி இடம் துனே முதலிய எவற்றினும் காலத்தை அறிந்து கொள்ளுவது தலைமை ஆதலால் காலம் அறிந்து என்று இதனை முத லில் குறித்தார். உரிய காலம் அறியவே அரிய விசை களே அது யாண்டும் எளிதே முடித்தருளுகிறது. ஏற்ற காலத்தை அறிந்து செய்பவர் எந்தக் காரி யத்தையும் எங்கும் நன்கு முடித்துக் கொள்ளுவர். இவ்வுண்மை செம்பியன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் சோழ மன்னன். காவிரிப்பூம் பட்டினத்தி லிருந்து அரசு புரிந்தவன். சிபி மரபில் பிறந்தவன் ஆத லால் அந்த நம்பியின் பெயரியல் மருவி இவன் செம்பின்