பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2530 திருக்குறட் குமரேச வெண்பா யன் என நின்ருன். இவன் சிறந்த மதிமான். வீரம் கொடை நியாயம் முதலிய அரச நீர்மைகள் எல்லாம் இவனிடம் சீர்மையா யமைந்திருந்தன. இவனுடைய ஆட்சி யாண்டும் மாட்சியாய் நடந்துவந்தது. வருங்கால் சுராரி என்னும் அசுரர் தலைவன் அரிய வரபலங்களோடு பெரிய அரண் அமைந்த பெரு நகரில் பெருமிதநிலையில் வாழ்ந்து வந்தான். திரிபுரங்களைப் போல அந்த மதிலர ணும் அதிசய வலியுடையது; வான வீதியில் உலாவ வல்லது. அதிலிருந்து கொண்டு அ ம ர ைர அடங்க வென்று எவரையும் அடக்கித் தமருடன் அவன் தருக்கி நின்ருன். அவனே வெல்ல முடியாமல் அல்லலுழந்து வந்த இந்திரன் முடிவில் இவனிடம் வந்து உரிமையுடன் வேண்டினன். இவ்வீரன் வென்று தருவதாக உறுதிகூறி விண்ணவர் வேந்தனே அனுப்பிவிட்டு எதிரியின் நிலை மைகளேயெல்லாம் பலவகையிலும் உசாவி யறிந்தான். பின்பு அகத்தியமுனிவரைத் தொழுது வணங்கி யாவும் தெளிவாக வுணர்ந்தான். அரிய அந்த அரணின் மருமங் களேயெல்லாம் நன்கு தெரிந்து கொண்ட இவன் உரிய கருவிகளோடு உற்ற காலத்தில் ஊ க் கி எழுந்தான். வானவரும் அஞ்ச வலிமை கொண்டிருந்த அந்தத் தான வர்புரத்தைத் தகர்த்தெறிந்து அசுரர் திரளேயும் அடங்க வென்று மடங்கலேறுபோல் இம் மன்னவன் வெற்றி வீறுடன் மீண்டு வந்தான். வானவர் கோனுடன் வான வர் யாவரும் இம் மானவீரனே வாழ்த்தி மகிழ்ந்தனர். உற்ற கருவிகளே ஆய்ந்து அமைத்துக் கொண்டு உரிய காலத்தில் ஊக் கி ச் செய்தால் அரிய வினையையும் எளிதே முடித்து அவன் வெற்றி வீரய்ை விளங்குவான் என்பதை இக் கொற்றவன் நன்கு விளக்கி நின்ருன். விங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்க்ரனம் காத்த உரவோன்யார்? அம்மானே! ஓங்கரணம் காத்த உர வோன் உயர்விசும்பில் துரங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானே சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானே. (சிலப்பதிகாரம் 29)