பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2597 485. காலம் கருதியேன் காத்திருந்தான் சீவகன்தன் கோலம் கரந்து குமரேசா-ஏலுகின்ற காலம் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். (டு) இ-ள் குமரேசா தனது ஞாலத்தை ஆளக்கருதிய சீவகன் ஏன் காலத்தைக் கருதி உறுதி சூழ்ந்து பொறுதியாய் அமர்ந்திருந்தான்? எனின், கலங்காது ஞாலம் கருது பவர் காலம் கருதி இருப்பர் என்க. உறுதியாக உலகத்தை ஆள விரும்புபவர் அதற்கு உரிய பருவ காலத்தை எதிர்நோக்கி மதி நலத்துடன் அமைதியாய் அடங்கி யிருப்பர். கலங்காது என்றது. ஐயமும் அச்சமுமின்றித் தெளி வாய்த் துணிந்திருத்தலே. இருத்தலேயும் கருதுதலேயும் விசேடித்து விருத்தி நிலையை இது விளக்கி நின்றது. ஞாலம் கருதுபவர் என்ற தல்ை அரசர் என்பது தெரிய கின்றது. அவரவர் தகுதிக்குத் த க் க வாறே யாண்டும் உரிமையோடு கருதுகின்றனர். கருத்து கிறைவேறுவது காலத்தைப் பொறுத்திருக்கிறது. - காலமே வெற்றி நல்கும் கருமத்தின் மருமம் எல்லாம் சாலவே காலத்துள்ளே தழைத்துள சார்ந்து கொள்க. இதனே இங்கே கூர்ந்து ஒர்ந்துகொள்ள வேண்டும். முயற்சிகள் எவ்வளவு செவ்வையாகச் செய்தச லும் உரிய நேரம் வந்தபோதுதான் கருமம் பலனைத் தரும். ஆகவே அதுவரையும் பொறுமையாய் எதிர் பார்த்து மருமமாய் அடங்கி யிருக்க வேண்டும். அடுத்து முயன்ருலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. (மூதுரை, 5) பருவ காலம் வந்தபோதுதான் பழங்கள் பழுக்கும்; அதுபோல் உரிய காலம் உற்றபொழுதுதான் கருமம்