பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2598 திருக்குறட் குமரேச வெண்பா கனிந்து பலனைக் கொடுக்கும் என ஒளவையார் இவ் வாறு ஒர் உவமை காட்டி உரைத்திருக்கிரு.ர். அரிய பலகீன அடைய வேண்டியவர் உரிய காலம் கருதிக் காத்திருக்க வேண்டும் என்பதை இந்த உவமை யால் ஒர்ந்து உள்ளம் தெளிந்து கொள்ளுகிருேம். காலம் பிழைத்தக்கால் பாலும் நோய் காட்டிவிடும்; நூலார் உணர்ந்தீயின் நஞ்சமும் நோய்விட்டும்; சீலரால் துன்பமும் தீயரான் இன்பமுமாம்; காலம் கருதல் கடன். (இன்னிசை) கால வேற்றுமைகளால் விளையும் விளைவுகளே விளக் கிக் காட்டி காலம் கருதல் கருமவீரரது கடமையாம் என இது வலியுறுத்தி யுள்ளது. உரிய துனேகளும் பருவ காலமும் மருவி வரும் அளவேதான் கருதிய பொருள் களே ஒருவன் இனிது பெற நேர்கின்ருன். ஆகுநர் யாரையும் துணேவர் ஆக்கிப்பின் ஏகுறு நாளிடை எய்தி, எண்ணுவ சேகறப் பன்முறை தெருட்டிச் செய்தபின் வாகையென்று ஒருபொருள் வழுவற் பாலதோ..? (இராமாயணம்) காலம் கருவி துனேகளைத் தெளிவாக ஆராய்ந்து கொண்டு வினேமேல் செல்பவனுக்கு வெற்றி நிச்சயம் உண்டாகும் என்று இது நன்கு உணர்த்தியுள்ளது. புரையக் கலந்தவர் கண்ணும் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க; வரையக நாட! விரையிற் கருமம் சிதையும் இடராய் விடும். (பழமொழி 2.27) காலம் கருதிக் கருமம்செய்ய வேண்டும்; உரிய பலனே ஒர்ந்து பொறுத்திருக்க வேண்டும்; விரைந்து செய்ய நேரின் அது சிதைந்து கெடும் என இது குறித்துள்ளது. தாம் கருதிய பொருளைப் பெறுதற்கு உரிமையான காலத்தை அறிஞர் ஒர்ந்து தேர்ந்து நேர்ந்திருப்பர். இது சீவகன் பால் தெரிய வந்தது.