பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 260 486 திண் டோள் நெடுமான் திறன்மிகுந்தும் ஏனெடுக்கம் கொண்டிருந்தான் முன்ள்ை குமரே சா-மண்டி நின்ற ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. (கள்) இ-ள் குமரேசா! திறல் மிகுந்திருந்தும் நெடுமான் ஏன் காலம் நோக்கிக் கருத்துடன் ஒடுங்கி யிருந்தான்? எனின், ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து என்க. வீரன் ஒடுக்கம் வெற்றியின் குறி என்கிறது. ஆற்றல் உடையவன் அடங்கி யிருக்கின்ற இருப்பு பொருகின்ற ஆட்டுக்கடா எதிரியை வேகமாய்ப் பாய்ந்து தொலைக்க ஆய்ந்து விலகும் தன்மையது. ஒடுக்கம் = வினேமேல் வெளிப்பட்டுச் செல்லாமல் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருக்கும் கிலே. ஊக்கம் இல்லாதவன் ஒடுங்கியிருப்பது இயல்பு. ஊக்கம் உடையவன் ஒடுங்கி நிற்பின் அந்த நிலையில் அரிய பல மருமங்கள் மருவியுள்ளன. கருதிய கருமங்கனே உறுதியாய்ச் செய்து முடித் தற்கு அறிவும் ஆற்றலும் தேவை. காரிய நீர்மைகளைக் கருதி நோக்கவும், உரிய கருவிகளே ஆராய்ந்துகொள்ள வும், ஏற்ற காலத்தை எண்ணித் தெளியவும் அறிவு வல்லது. அவ்வாறு தேர்ந்து தெளிந்து கொண்ட வினே யைத் திறமாகச் செய்து முடிப்பது ஆற்றலாம். இத்தகைய ஆற்றல் அமைந்த அரசன் விரைந்து சென்று பகைவனே வென்று தொலைக்காமல் அமைதி யாய் அடங்கியிருக்க நேரின் அதில் ஒரு பேராற்றல் பெருகி விளேகிறது என்பதை இங்கே அறிய நேர்ந்துள் ளோம். உறுதி ஊக்கங்கள் பொறுதியோடு பொருந்தி வரின் அரிய ஆக்கங்கள் அங்கே அமைந்து வருகின்றன. ஞாலம் கருதுபவர் காலம் கருதி இருப்பர் என்ருர் 326