பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2602 திருக்குறட் குமரேச வெண்பா முன்பு: இதில் அந்த இருப்பு எந்த வகையிலும் அதிசய வெற்றி யுடையது என்கின் ருர். அவ்வுண்மையைத் தெளிவாக விளக்குதற்கு ஒர் உவமையை இதில் நயமா நன்கு இணேத்துள்ளார். தகர் =செம்மறி ஆட்டுக் கடா. எதிரியைத் தகர்ப் பது தகர் என வந்தது. பொராத தகர்களும் பல உள ஆதலால் பொருதகர் என்று இதனே விளக்கியருளினர். தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்து ஊக்கம் உடையார் ஒதுங்கியும்-கார்க்கீண்டு இடிபுறப் பட்டாங்கு எதிரேற்றர் மாற்றர் அடிபுறத் திடும் அரிது. (பெரும்பொருள்) எயில் காக்கும் வீரர் ஒடுங்கியிருந்து காலம் வாய்த்த போது எதிரிகள் நிலைகுலைந்து ஒழியும்படி விரைந்து பாய்ந்து வென்று தொலைப்பர் என்று குறித்திருக்கும் இதன் குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. ஊக்கம் உடையார், தாக்கற்குப் பேரும் தகர் என காயனர் வாப் மொழியை இது நயமாய்த் தழுவி வந்துளது. உண்மை யை ஒர்ந்து காலக் குறிப்பைக் கருதிக் கொள்ளுக. இது மிக்க வீரம் உடையது; போராடுவதில் வல்லது. எதிரியோடு முட்டிப் பொருங்கால் சிறிது பின்வாங்கி முன்னேறி வேகமாய்ப் பாயும். அங்த அடிபேர்தல் பகை முடிவாய்ப் பேர்ங்து போகத் தாக்குதற்கு ஊக்கமாப் உறுதி புரிந்துள்ளது. இந்தத் தகரை ஒன்ருேடு ஒன்று முட்டவிட்டுப் போர் மூட்டி வீர வெறியராய் வேடிக்கை பார்ப்பது இந் நாட்டில் இன்றும் வழக்கமா புள்ளது. கோட்டிளந் தகர்களும் கொய்ம்மலர தோன்றிபோல் சூட்டுடைய சேவலும் தோணிக் கோழி யாதியா வேட்டவற்றின் ஊறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளிஇக் காட்டியார்க்கும் கெளவையும் கடியும்கெளவை கெளவையே (சீவகசிந்தாமணி 73) ஆட்டுக் கடா சேவல்களின் போர்களைப் பண்டை மக்கள் க ண் டு களித்துள்ளதை இது காட்டியுளது.