பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2604 திருக்குறட் குமரேச வெண்பா பகைமை நீண்டு போருக்கு மூண்டார். அவருடைய கிலேமைகளே அறிந்தும் நேரம் கருதி இவன் அடங்கி யிருந்தான். இவனுடைய படைவீரர்கள் போர்ப்பயிற்சி களில் தேர்ச்சி மிகப் பெற்றவர். பல இடங்களில் பரவி யிருந்த அவரை ஒருங்கு திரட்டி உரிய காலம் வரவும் இவன் போருக்கு ஊ க் கி எழுந்தான். அப்பொழுது இவன் மனைவி பூரண கருப்பினியா யிருந்தாள். பேறு கால நேரம் என்று தெரிந்திருந்தும் தனக்கு ஏறுகாலம் எனக் கருதி போர்மேல் போனன். பகைவரை விரைந்து பொருது வென்ருன்; வெற்றித் திருவுடன் மீண்டு வங் தான். ஆண் குழந்தை பிறந்திருந்தது. அந்தப் போர்க் கோலத்தோடே நேரே வ ந் து ஆர்வத்துடன் தன் பிள்ளையைக் கண்டான்: உள்ளம் உவங்து கின்ருன். அந்தக் காட்சியை அயலே காண வருகின்ருேம். கையது வேலே, காலன புனே கழல், மெய்யது வெயரே, மிடற்றது பசும்புண் , வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு 5 வெட்சி மாமலர் வேங்கையொடு விரை இச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னும் மாருது சினனே ; அன்னே! உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே 10 செறுவர் நோக்கிய கண் தன் சிறுவனே நோக்கியும் சிவப்பா னுவே. (புறம், 100) இந்தக் கவியில் மருவியுள்ள பொருள் கிலேகளைக் கருதிக் காண்பவர் இவனுடைய உள்ளப் பண்பையும் பிள்ளைப் பாசத்தையும் உ க் கி ர வீரத்திறல்களேயும் ஒர்ந்து உணர்ந்து உவந்துகொள்வர். பேராற்றலுடைய யிைருந்தும் பகைவர் செய்த மிகைகளேப் பொறுத்துக் காலம் கருதி ஒடுங்கி யிருந்தான். பின்பு விரைந்து சென்று ஒருங்கே வென்ருன். பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைமைபோல் ஊக்கம் உடையவன் ஒடுக்கம் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன்.