பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கால ம் அறிதல் 2607 மூலம்பார்க் குறின் உலகை முற்றுவிக்கும் முறைதெரினும் காலம்பார்த் திறைவேலே கடவாத கடல் ஒத்தான். (இராமா, 5 : 2) ஆலம் உண்ட நீலகண்டன் போல் அதிசய ஆற்றல் கள் அமைந்திருந்தாலும் மதிநலம் உடையவர் எண்ணு மல் வெகுண்டு துணியார்: காலம் பார்த்தே காரியம் கருதி அடங்கி நிற்பர் என்பதை இதில் அறிந்து கொள் கிருேம். ஒள்ளியவர் காலம் பார்த்து உள்வேர்ப்பர் என் னும் தேவர் வாய்மொழி இதில் மேவி வந்துள்ளது. தமக்கு மிக்க வலி அமைந்திருந்தாலும் தக்க சமை யம் வரும் வரையும் சினத்தை அடக்கி அறிஞர் அமைதி யாயிருப்பர். அதனால் அவர் வெற்றி மிகப் பெறுவர். இது தருமர் பால் அறிய வந்தது. ச ரி த ம் . துரியோதனன் வஞ்சித்து அழைத்துப் பஞ்சவரின் செல்வங்களே யெல்லாம் சூதாடிப் பறித்துக் கொண் டான். பின்பு பாஞ்சாலியையும் பற்றி இழுத்து வந்து அரசவையில் நிறுத்தி அவமானம் செய்வித்தான். சபை யிலிருந்த யாவரும் பரிந்து வருந்தினர். அப்பொழுது வீமனும் விசயனும் வெகுண்டு மூண்டார். அந்த வீரத் தம்பியரைத் தடுத்து அடக்கிப் பொறுமையாயிருக்கும் படி தருமர் பணித்தார். கொடிய அநீதியைச் செய்ய லாகாது எனத் தம்பி விகருணன் அறிவுரை கூறியும் அத்தியவன் துரயவள் துகிலே உரியும்படி துச்சாதனனே ஏவினன். பாவி என அவனே யாவரும் இகழ்ந்தனர். என்னவெகுண் டிடுகின்ற எல்லே.தனில் எழுவுறழ்தோள் இராச ராசன் தன்னனைய கொடுங்கோபத் தம்பியையின் றும்பிதனைத் தக்கோன் என்ற மன்னவையின் எதிரேயிம் மானமிலா ஐவரையும் வழக்கு வார்த்தை சொன்னகிளி மொழியினேயும் துகிலுரிதி எனவுருமிற் சொன்னன் மன்னே. (1)