பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 26 13 அருளே நேரே பெற்றுவந்துள்ள அவ்வீரன் எதிரே அ&ன வரும் ஒருங்கே ம | ண் டு மடிந்தனர். தானவர்களே வென்று மீண்டு வந்த அந்த ஆண்டகையை வானவர் கோன் வாழ்த்தி உபசரித்து மகிழ்ந்திருந்தான். சமை யம் அமையும் வரையும் பகைவரைப் பணிந்து வா. காலம் வாய்த்தால் உடனே அவரை அழித்து ஒழித்து விடு என்பதை எவரும் எண்ணி யுணர விண்ணவர் கோன் நன்கு விளக்கி நின்ருன். கோலரை வென்றுகொள்ளும் நேரமுறின் அப்பொழுதே வேரற வெல்க விரைந்து, செறுநரை ஒழித்துச் சீருடன் வாழ்க. 489. குன்றின்ை சேடனெனக் கூர்ந்தறிந்த வாயுவன்றேன் குன்ருமல் வென்ருன் குமரேசா-என்றுமே எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். (கூ) இ-ள். குமரேசா! ஆதிசேடைேடு வாதாடிய வாயு சமையம் வாய்த்தபொழுது விரைந்து மூண்டு ஏன் வெற்றி பெற் ருன்? எனின். எய்தற்கு அரியது இயைந்தக்கால் அக் கிலேயே செய்தற்கு அரிய செயல் என்க. அரிய பொழுதின் உரிய பயன் அறிய வந்தது. - பெறுதற்கு அரிய சமையம் பெறப்பெற்ருல் அப் பொழுதே செய்ய அரிய வினேகளேச் செய்து முடித்துக் கொள்க. செயல்=செய்க. வியங்கோள் விதி. காலம் மருவிய க ரு ம ம் சாலவும் பெருமையாய் வரும். அவ்வரவினே இதில் உரிமையாய் உணர்ந்து வினே செயல் நிலைகளைத் தெளிந்து கொள்கிருேம். எய்தற்கு அரியது என்றது இங்கே காலத்த்ை. காலம் அறிதல் என்னும் அதிகாரம் ஆதலால் இங்ங்னம் இது காண வந்தது. தானே வந்து இயைந்தால் அன்றி வேறு எவரும் அதனே இசைக்க முடியாது. அவ்வாறு