பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.26 திருக்குறட் குமரேச வெண்பா வினே செய்யும் வகைகளே விளக்கித் தன் மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு அறிவு கூறி யிருக்கிருன். வினே தொடங்கும் பண்புகள் இங்கே நன்கு அறிய வந்தன. செயலாலும் சொல்லாலும் எதிரிகளுக்கு விழிப் பூட்டி இடர்களே விளைத்து விடாதே என்பார் தொடங் கற்க எள்ளற்க என்ருர்: எதிர்மறைவியங்கோள்கள் விதிமுறைகளாய் நிலைமைகளே வலியுறுத்தி கின்றன. உரிய இடவலியை அறிந்தே உரவோர் வினை புரிய நேர்வர். அதனால் அரிய பலன்களே அவர் அடைவர். இந்த வினைத்திறமும், மனத் திடமும், மதியூகமும் காரியிடம் சீ ரு ட ன் தெரிய வங்தன. ச ரி த ம் . இவன் ஒரு குறுநில மன்னன். திருக்கோவலூரி லிருந்து அரசு புரிந்தவன். பெண்ணேயாற்றை அடுத் துப் பரந்து விரிந்திருந்த நிலப்பகுதி இவனுக்கு உரிமை யாயிருந்தது. மலைநாடுகளுக்குத் தலைவன் ஆதலால் மலையமான் திருமுடிக்காரி என்று இவன் தலைமையாய் விளங்கி நின்ருன். சிறந்த மதிமான். அருந்திறலாண் ைம யும், பெருந்தகைமையும், பெருங் கொடைமையும். இவனிடம் ஒருங்கே நிறைந்திருந்தன. எவர் வந்து எதைக் கேட்டாலும் உவந்து ஈயும் இயல்பினதைலால் இவனது புகழ் எங்கும் ஓங்கி நின்றது. வறியவர் வக்து இவனே ஒருமுறை கண்டால் பின்பு அவர் வறுமையைக் கானர் என்னும் பெருமையை இவன் உரிமையோடு பெற்றிருந்தான். புலவர் திலகரான கபிலர் இவனு: டைய ஈகை இரக்கங்களைக் குறித்து வியந்து புகழ்ந்து பாடி யுள்ளார். அப்பாட்டு அயலே வருகின்றது. நாளன்று போகிப், புள்ளிடை தட்பப், பதனன்று புக்குத், திறனன்று மொழியினும், வறிது பெயர்குவர் அல்லர்; நெறிகொளப் பாடான் றிரங்கும் அருவிப் மீடுகெழு மலையற் பாடி யோரே. (புறம், 124)