பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இட ன் அறி த ல் 26.29 முரண்புகு தீவினே முடித்த முன்னவன் கரண் புகு சூழலே சூழக் காண்பதோர் அரண்பிறி தில்லென அருளின் வேலையைச் சரண் புகுந் தனன் என முன்னம் சாற்றின்ை. (இராமா, விபீடண, 541 இராமனே அரண் என வந்து விபீடணன் சரண் புகுந்துள்ளதை இதில் அறிந்துகொள்கிருேம். தன்சீனச் சரணமடைந்தவர்களே இனிது காத்தருளுவது இராம னது தனி நீர்மை ஆதலால் அரணியன் என்று ஒரு பெயர் அவனுக்கு நயமாயமைந்தது. சரணுகதரட்சகன் என அப் பெருமான் பேர் பெற்றிருப்பதும் இங்கே சிந்திக்கவுரியது. சிறந்த போர் வீரரை மொய்ம்பினவர் என்று தோள்மேல் வைத்துக் குறித்திருக்கிருர். எல்லா ஆற்றல்களுக்கும் மனிதன் தனி நிலையமாய் கிற்கிருன்: அந்த ஆள் ஆற்றல் தோள் ஆற்றலால் துலங்கி வரு கிறது. ஆகவே தோள் வலி கூறுவது வீர மரபாயது. சீதையை விடுவது உண்டோ? இருபது திண் டோள் உண்டாய். முரண் சேர்ந்த மொய்ம்பினனை இராவணன் தனது தோள் வலியை இவ்வாறு வியந்து கூறியிருக்கிருன். அந்தத் தோள்களைத் துணித்து வீழ்த்தியே த ன து அருமைத் தேவியை மீட்டி வந்துள்ளமையால் இராம பிரானது தோள் வலிமையை வியந்து புகழ்ந்து உலகம் உவந்து துதித்துப் போற்றி வருகிறது. நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் விடியல் வழிய தாக்கும் வேரியங் கமலே நோக்கும் நீடிய அரக்கர் சேனே நீறுபட் டழிய வாகை சூடிய சிலையிராமன் தோள்வலி கூறு வோர்க்கே. இராமனுடைய தோள் வலிகளேக் கூறுவோர்க்கு உளவாம் பேறுகளே இது சீராக வரைந்து காட்டியுளது. வீரமூர்த்தியின் விழுமிய கிலே வியன அறிய வந்தது. அறிவாலும் அறத்தாலும் தவத்தாலும் முயற்சியா லும் ஆக்கங்கள் வரும்; ஆகவே அவற்றினும் வேறுபாடு