பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2632 திருக்குறட் குமரேச வெண்பா முட்டி யிவரைக் கொடுபோந்து வேட்கை முறையே என மொழிந்தாள். (2) (உத்தரகாண்டம்) சுட்டிமொழிந்த இந்த உரைகளைக்கேட்டதும் அவன் சினங்தணிந்தான். சிந்தை உவந்தான். உறவுரிமையுடன் அரண்மனேயுள் புகுந்தான். மதுவும் மகிழ்ந்து தழுவி உபசரித்தான்: இருவரும் நண்பராயினர். பின்பு அன்பரா யின் புற்றிருந்தார். முரண் சேர்ந்த மொய்ம் புடைய இவன் அரண் சேர்ந்து ஆக்கம் மிகப் பெற்ருன். திடமிகுந்த தீரனும் தேர்ந்த திறல்சேர் இடமுறின் ஏற்ற முறும். தக்க அரண் சார்ந்து கில்.

=

493. ஆற்ருச் சிகண்டியுமுன் ஆற்றிவென்ருன் விடுமனேர் கூற்றென நின் றென்னே குமரேசா-ஊற்றமுடன் ஆற்ருரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்ருர்கண் போற்றிச் செயின். (ங்) இ-ள் குமரேசா ஆற்றமாட்டாத சிகண்டியும் ஆற்றலு டைய வீடுமனே ஏன் முன் ஆற்றி வென்ருன்? எனின். இடன் அறிந்து போற்ருர்கண் போற்றிச் செயின் ஆற்ரு ரும் ஆற்றி அடுப என்க இடவலி தெரிந்து பகைவர்பால் வகையாய் நின்று போர்செய்யின் வலியில்லாதாரும் வலியராய் உயர்ந்து எவரையும் வென்று விளங்குவர். ஆற்ருர்=வலியர் அல்லார். ஆ ற் ற ல் என்பது ஆண்மைத் திறம் ஆதலால் அ.து இல்லார் ஆற்ருர் என நேர்ந்தார். உம்மை அவரது இழிவை உணர்த்தி கின்றது. ஆற்றலுற்ற அளவு மனிதன் ஏற்றமுடைய யைப் உயர்ந்து திகழ்கிருன்; அதனே இழந்தவழி இழிந்து கழிகிருன். வலியில்லாரும் இடத்தால் வலி யுறுவர்.