பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 2 திருக் குறட் குமரேச வெண்பா தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலே; பிள்ளே தின்னும் முதலே. (ஐங்குறுநூறு) தான் பெற்ற பிள்ளையைத் தின்னும் கொடுமையுடை யது என முதலேயை இங்ங்னம் ஒரம் போகியார் உரைத் திருக்கிருர். இதன் தீய புலே கிலே தெரிய வந்தது. வன்மீன், கராம் என இந்த இனத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் எல்லாம் தலைமையாய் முதன்மை. அடைந்து வந்துள்ளது முதலே என நேர்ந்தது. ஒடுங்கிருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும் கொடுந்தாள் முதலேயும் இடங்கரும் கராமும். (குறிஞ்சி 256) முதலேயின் இனங்களே இதில் அறிந்துகொள்கிருேம். கோள்வன் முதலேய குண்டுகண் அகழி. (பதிற்றுப்பத்து 53) கெண்டை யஞ்சினே மேய்ந்து கிளர்ந்துபோய் முண்ட கத்துறை சேர்ந்த முதலே மா. (சூளாமணி, நாடு 22) சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த வாரை சுற்றுமுற்று பாரெலாம் போழ்ந்தம கிடங்கிடைக் கிடந்துபொங் கிடங்கர்மா தாழ்ந்த வங்க வாரியில் தடுப்பொன மதத்தினுல் ஆழ்ந்த யானே மீதெழுந்து அழுந்துகின்ற போலுமே. (இராமா, நகரம் 17) ஆழ்ந்த அகழிநீரில் முதலேகள் எழுதல் கடலில் யானே கள் எழுந்து அழுந்துதல் போல் இருந்தன என இது குறித்துளது. வன்மை முதலியன தெரிய வங்தன. வலிய பெரிய மதயானையும் முதலே வாயில் சிக்கின் மீள முடியாது: உள்ளே அது வலித்து இழுத்துக் கொண்டு வதைத்து விடும். தாட்டடு சின்னிர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅ. (புறம் 104) நீரில் நேரின் ஆற்றல் மிகவுடைய யானேயையும் முதலே கொல்ல வல்லது என இது குறித்துள்ளது.