பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 26 43 மோட்டும் முதுநீர் முதலேக்கு வலியது உண்டேல் காட்டுள் நமக்கு வலியாாையும் காண்டும் நாமென்று ஏட்டைப் பசியின் இரை கல்விய நாக மேபோல் வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. (சீவக சிந்தாமணி 446) நெடும்புனலுள் முதலே எதையும் வெல்ல வல்ல வலியுடையது; கடுங்காட்டுள் வேடர் எவரையும் வெல்ல வல்லவர் என அவர் வீறுகொண்டு இங்கனம் கூறி யுள்ளனர். இடமே அரிய பெரிய திடம் என்பதாம். கொடுங்கால் முதலேக் கோள்வல் ஏற்றை. (குறுந்தொகை 324) முதலையின் கால்கள் வளைந்திருக்கும் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம் வாய் அகன்று பற்கள் வக்கிரமாப் வாய்ந்திருத்தலால் இதன் வாயில் சிக்கியது பேய்வாய்ப் பட்டதுபோல் நோயாய் மாய நேருகிறது. பிற அதனை அடும் என்றது நீரைவிட்டு அயலே வரின் சிறிய பிராணிகளும் முதலேயைக் கொன்று தொலைத்து விடும் என்பது ஈங்கு நன்கு தெரிய வந்தது. முன்பு வலியயைப் அல்லல் செய்தவன் பின்பு எளியய்ை இழிந்து அழிவான் என்னும் கரும விளைவும் தரும நீதியும் மருமமாய் இதில் மருவியுள்ளன. o இடத்தின் வலிமையை மாந்தருக்குத் தெளிவா விளக்குதற்கு முதலே ஈண்டு முதன்மை எய்தி நின் அறுள்ளது. நிலை பிரிய நேர்ந்தால் தலை பிரிய நேரும். வெல்லும் என்னும் வினேக்கு உரிய செயப்படு பொருள் இ தி ல் வெளிப்படையா யில்லே ஆயினும் :தலேமையான நிலைமையால் யானே தகவாய் வந்தது. யானே யைச் சலந்தனில் இழுத்த அக்கரா பூனேயைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ? தானே யும் தலைவரும் தலம்விட் டேகில்ை சேனேயும் செல்வமும் சிதைந்து தேய்வரே. (விவேக சிந்தாமணி)