பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இடன் அறிதல் 2645 சாபத்தால் வந்து கிடந்த பெரிய முதலே இதன் காகிலப் பற்றிக்கொண்டது. வெருண்டு விரைந்து இது வெளி யேற முயன்றது. அது இறுகக் கெளவிக்கொண்டு உள்ளே ஈர்த்தது. அந்த முதலே வலிந்து இழுக்கவே இந்த மதயானே மெலிந்து தளர்ந்து உயிருக்கு மன்ருடி முடிவில் முடிவில்லாத பரமனே நினைந்து ஓலமிட்டது. ஆதிமூலமே என்று ஒலமிடவே திருமால் அதி வேக மாய் வந்து ஆழியால் அதனே வீட்டி இதனை மீட்டி யருளினர். மீட்சி அதிசயக் காட்சியாய் கின்றது. கூப்பிடு குரல் கேட்டு ஓடிக் கொழுமணிச் சுடிகை நெற்றிப் பாப்பனே அகற்றி வெய்ய படர்சிறைக் கலுழன் ஊர்ந்து தீப்பொழிந்திலங்கு கூர்வாய்த் திகிரிகைத் தாங்கி யாவும் காப்பவன் பிறைவெண் கோட்டுக்களிற்றுமுன் எய்துற்ருளுல் எறிசுடர் விரிக்கும் நேமி எறிந்தனன் எறித லோடும் பிறைபுரை எயிற்றுப் பேழ்வாய் பிளந்துவெவ்விடங்கர்,துஞ்சி அறைதரு சாபம் தன்னுல் அடைந்தவவ் வுருவு நீத்து விறலுடை யூகூ என்னும் விஞ்சையன் ஆயிற் றன்றே. (2 விழுமிய இசைநூல் தேர்ந்த விஞ்சையன் ஆய அன்னுேன் பழமறை முதலி பாதம் பழிச்சினன் பதியிற் போயான் அழிவறு தவத்தின் மிக்க அகத்தியன் சாபம் தீர்ந்து மழைமதக் களிறு மாயன் வரம்பில் வீ டுற்ற தம்மா ! (3) (பாகவதம் 8, 2) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இவற்ருல் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். கெடும் புனலுள் முதலை வெல்லும் என் பதை உலகம் காணக் கசேந்திரன் காட்டிச் சென்ருன். இந்தச் சரித்திரத்தைப் பலநூல்களும் பாராட்டி யுள்ளன. அயலே வருவன ஈண்டு அறிய வுரியன. கரா மலே யத்தளர் கைக்கரி எய்த்தே அராவண யில்துயில் வோய்! என அந்நாள் விராவி யளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே இராமன் எனப்பெயர் ஈந்தனன் அன்றே. (இராமா, திருஅவ 120).