பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2422 திருக்குறட் குமரேச வெண்பா தான்? எனின், இடிக்கும் துணே யாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமையவர் என்க. கேடுருமல் வாழ இது வழி கூறியுளது. அடுத்து வற்புறுத்தி அறிவு கூறுவாரை அன்புடன் ஆதரித்து வரும் அரசரைக் கெடுக்கும் வலிமையாளர் யாரும் இலர். - இடிக்கும் துணே யார் என்றது தக்க புத்திமதிகளே வலியுறுத்திக் கூறும் நல்ல நட்பாளரை. இத்தகைய உத்தமர்களே உரிமையாகத் தழுவி வருபவர் விழுமிய ராய்ப் பெருமை பெற்று வருகின்றனர். அரசர்பால் இடித்துச் சொல்பவர் அரியர். இனி மையாய் இச்சகம் பேசி வீணே முகத்துதி செய்து நளினமா நடிக்கும் துணேயாரே அவரைச் சுற்றி நிற்க நேர்வர். அந்தச் சிறுமையாளரை விலக்கிப் பெருமை யாளரைத் துணைக்கொண்டவரே இருமையும் நலமாப் பெரு மேன்மை பெறுவர். மாந்தருள்ளே தலைமையாய் நிலவி நிற்கும் வேந்த ரை இடித்து நீதிகளேச் சொல்ல வல்லவர் அரிய தவ நெறிகளையுடைய பெரியோர்களும், மதிமந்திரிகளுமே யாவர். இடிக்கும் துணையார் என்னும் குறிப்பால் அவ ருடைய தலைமையும் நிலைமையும் தகைமையும் வகை மையும் நன்கு தெரிய வந்தன. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின். (தொல்காப்பியம் கற்பு, 14) நெறிமுறைகளே வலியுறுத்திச் சொல்லி நல்ல வழி யில் தலைவரை கிலே நிறுத்த வல்லவர் அறநலமுடைய பெரியோர்களே என ஆசிரியர் தொல்காப்பியர் இங்ங் னம் குறித்துள்ளார். இடித்தல் இதில் குறித்து நிற்கும் பொருளேக் கூர்ந்து அறிக. நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள், 784)