பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2647 நிலத்தில் ஒடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா;கடலில் ஒடும் மரக்கலங்கள் கிலத்தில் ஓடா: பீடு அழிந்து அவை பிழையாய் கிற்கும் என்பதாம். தேரும் நிலமும் நீரும் நாவாயும் இங்கே ஆராய வந்துள்ளன. அவர வர் க்கு உரிமையான இடம்ே பெருமையான வலிமையை அவர்க்கு உறுதியாய்த் தரும் என்னும் உண்மையைத் தெளிவா விளக்குதற்குப் பலவகையான உவமைகளே எடுத்துக்காட்டி வருகிருச். நிலத்தில் வலிய யானே நீரில் புகின் அதனே அங்கே வலிய முதலே கொல்லும் என்று முன்னம் குறித்துக் காட்டினர். உயிருள்ள பிராணிகளுக்கே அன்றி இந்த வன்மை உயிரில்லாத சடங்களுக்கும் இயற்கையாய் அமைந்துள்ளமையை இதில் உணர்த்துகின்ருர். நாவாயும், தேரும் மரக்கட்டைகளால் செய்யப் பட்டிருப்பினும் முன்னது நீரில் வலியுற்றது. பின்னது நிலத்தில் வலிபெற்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் இட வலிமையால் அவர் அடல் வேறு படுவர் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். ஒடா என்னும் பன்மை வினைக்கு ஏற்பஎழுவாய்கள் தழுவி நின்றன. ஒடாது என்று ஒருமையில் குறிக்க வில்லை. எந்த வகையான அதிசய வலிமைகளும் அசிய வேலைப்பாடுகளும் உடையனவாயினும் இந்த வகையில் அவை செல்லா என்பது சிங்தை தெளிய வங்தது. இடன் அறிந்து வினைசெய்யவுரிய அரசரும் பலர் ஆதலால் அவர் நிலைக்கு இசைய இவை பலவாய் அமைந்தன. உவமானத்தால் உபமேய கிலேயை உணர்ந்து கொள்ளும்படி வந்துள்ளமையால் பிறிது மொழிதல் என்னும் அலங்காரம் இதில் துலங்கி கின்றது, கெடும் புனல் என முன்னர் வந்துள்ளதும் இந்த அணியே படிந்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து உணர வந்தன. கால் என்றது தேரின் உருளைகளே.