பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2658 திருக்குறட் குமரேச வெண்பா எதிரியுடைய தானத்தின் கிலேமையை எண்ணிப் பாராமல் தனது தானப்பெருக்கை எண்ணிச் செருக்கிச் செருச்செய்ய வருபவன் சீரழிந்து சிதைந்து கெடுவான். தானம் அறியாமல் வங் து பொருதால் மானம் பறிபோம். மதிப்பிழந்து நொந்து அவன் வருந்துவான். இது சராசந்தன்பால் தெரிய வந்தது. ச ரி தம். இவன் மகதநாட்டு மன்னன். கிரிவிரசம் என்னும் இராசதானியிலிருந்து அரசுபுரிந்து வந்தான். கஞ்ச னுக்கு இவன் மாமன் முறையினன். கண்ணபிராைேடு மாறுபாடு மண்டி அவ ன் மாண்டுபோனபின் அங்த மாயனே எப்படியாவது மாய்த்துவிட வேண்டும் என்று இவன் மூண்டு கின்ருன். காலம் கருதியிருந்தவன் தனக்கு உரிய பெரிய படைகளோடு பொங்கிவந்து வடமதுரையை வளேந்துகொண்டான். யாதொரு ஆயத் தமுமில்லாமல் இருந்த கண்ணன் அண்ணன் பல ராமரை ஊக்கிப் போர் புரிய நேர்ந்தான். தம்பியை அரண்மனையில் அமைதியாயிருக்கும்படி பணித்துவிட்டு யாதவர்களேத் திரட்டிப் பலராமரே உள்ளம் துணிந்து ஊக்கிப் பொருதார். வந்த பெரும் படைகளே கின்ற சிறுபடைகள் எங்கும் கடுத்துத் தடுத்து பாண்டும் மூண்டு போராடின. அந்தச் சேனேகள் சிதைந்து அழிந்தன. அரசனும் பிடிபட்டான். அவனேப் பாசத் தால் பிணித்துக் கொண்டுபோய் பலராமர் சிறைப் படுத்தினர். க ண் ண ன் அந்தக் கட்டை அவிழ்த்து வெளியே விட்டுவிடும்படி கூறினர். அவ்வாறு சிறை நீக்கிவிடவே இவன் நாணி நொந்து தன்நகரை கோக்கிப் போனன். நேர்ந்த அழிவுகளேயும் இழிவுகளேயும் நினேந்து கினேந்து நெடுந்துய ரடைந்தான். நெஞ்சம் கவன்று: உலகவாழ்வை வெறுத்துத் துறவியாக தேர்ந்தான். வாளினே நோக்கும்; நாஞ்சில் வலத்தினன் சிக்க யாத்த தோளினே நோக்கும்; இற்ற சுற்றமை வரவை நோக்கும்;