பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2665 தமக்கு உரிய இடம் அல்லாத இடத்தில் புகுந்தால் எவ்வளவு பெரிய வலியுடைய ராயினும் அவ்வளவும் சிதைந்து அ வ ர் அடுதுய ரடைய நேர்வர். இந்த உண்மையைத் தெளிவாக விளக்குதற்கு ஒ ர் உவ மையை இதில் நயமாக இணேத்துக் காட்டியிருக்கிருர், எடுத்துக் காட்டுகள் பொருள்களே எவ்வழியும் செவ்வை யாய் வடித்துக் காட்டி வருகின்றன. களர்=உவர்நிலம். களிமண்ணும் கழிநீரும் கலந்து குழைசேருய்க் கிடக்கும் இழிநிலம் களர் என வந்தது. இந்தச் சேற்று நிலத்தில் யானே புகுந்தால் அதன் கான்கு கால்களும் ஆழ்ந்து தாழும் தாழவே அது யாதும் மீள முடியாமல் அயர்ந்து கிடக்கும்; அயலே பெயர முடியாமல் மயலாய் மறுகிக் கிடக்கும் அக்கரி யின் தசையை கரிவங்து கடித்துத் தின்னும் தின்னவே அது இன்னுயிர் நீங்கநேரும் ஆதலால் கால் ஆழ் களரில் சிக்கிய களிற்றை கரி அடும் என்ருர்.

- உருவத்தாலும் வலிமையாலும் தப்ேபை புடைய யானே தவருன வழியில் சென்று வழுவாய் இழிக் தமையால் அழிது L07 ய்த் தாழ்வடைந்து மடிந்தது. கண் அஞ்சா= எதைக் கண்டும் யாதும் அஞ்சாத, அதன் திடமும் திண்மையும் தீரமும் இதல்ை தெரிய வந்தன. இவ்வளவு வன்மைகளும் புன்மையாயின. வேல் ஆழ் முகத்த களிறு = கூரிய வேலாயுதம் ஆழ்ந்து பாய்ந்த தழும்புகள் தோய்ந்த முகத்தை யுடைய யானே. போர்முகத்தில் யாண்டும் அஞ்சாமல் புகுந்து மூண்டு போராடுங்கால் பகைவர்கள் வெகுண்டு விசிய நெடிய வேல்கள் பாய்ந்து வடுக்கள் பல முகத்தில் படிந்திருந்தன. ஆதலால் அந்த வீரப்பாடுகளே இந்த விசேடணங்கள் இங்கு நன்கு விளக்கி யுள்ளன. வேலாள் எனப் பாடங்கொண்டு வேறு பொருள் கூறுவது யாரும் தேருத மாறுபாடாம். 334