பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. இ ட ன் அ றி த ல் 2669 வன், இவன் இளவரசனுயிருக்கும்பொழுது துரியோ தனன் இவனுடைய நாட்டின் மேல் படையெடுக்க நேர்க் தான். உருமாறி அங்கே பஞ்சைகளாய் வந்து புகுந்த பஞ்சவர்க்கு இடம்கொடுத்து அவரை ஆதரித்து வருத லால் விராடன்மேல் மாறு பா டு கொண்டு, எப்படி யாவது பாண்டவரை வெளியேற்றிவிட வேண்டும் என்று படைகளோடு அவன் மூண்டு வந்தான். முதலில் பசுத்திரள்களைக் கவர்ந்தான். கவரவே விராடமன்னன் சே&னகளோடு சேர்ந்து போராட நேர்ந்தான். தென் திசையில் இவ்வேந்தன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது எதிரி படைகள் சில வடதிசையில் வந்து வ8ளந்தன. வளையவே அரசி உளம் மிக உளேந்தாள். அப்பொழுது இக்குமரன் ஊ க் கி எழுந்தான். தன் தேரைச் செலுத்த ஒரு சாரதியிருந்தால் தானேபோருக் குச் செல்வதாக உரைத்தான். அங்கே பேடிவடிவில் உருமாறி மருவி யிருந்த விச யன் அதற்கு விரும்பி யிசைந்தான். விரைந்து குதிரைகளேப் பூட்டித் தேரை ஆயத்தம் செய்து நேரே நிறுத்தின்ை. வில்லும் கையு மாய் உத்தரன் தேர்மேல் ஏறினன். படைகளே நோக் கித் தேர் விரைந்தது. எதிரிகளுடைய சேனைத் திரள் க&ளக் கண்டதும் இவன் உடல் நடுங்கி உள்ளம் கலங்கி ன்ை. தேரை ஊருக்குத் திருப்பு' என்று உளறின்ை. பெண்ணுருவில் மருவியிருந்த அப்பெருவீரன் புன்னகை செய்தான்: 'அரசர் குலத்தில் பிறந்திருந்தும் போருக்கு அஞ்சலாமா ? நீ சும்மா வா வெற்றி உனக்கு உண்டா கும்படி நானே செய்கின்றேன்' என்று சாரதி நயமாய்க் கூறிஞன். யா து கூறியும் கேளாமல் தேரிலிருந்து குதித்து இவன் ஒடின்ை சா தி விரைந்து பின் தொடர்ந்து இவனைப்பிடித்து வந்து தேரில் இருத்தின்ை. கைந்நடுங்கவும் கால்நடுங் கவும்கருத் தழிந்து மெய்ந்நடுங்கவும் நாப்புலர்ந் துயிர்ப்புமேல் விஞ்சிச் சொன்னடுங்கவும் சுடர்முடி நடுங்கவும் சோர்ந்தான் மைந்நெடுங்களிற் றுரனுடை விராடர்கோன் மைந்தன். (1),