பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. .ெ த ரிங் து .ெ த வரி த ல் 2673. அறம் பொருள் இன்பம் வீடு என்பன மனிதன் அடைந்து அனுபவிக்க வுரிய இனிய செல்வங்கள். இறுதியில் உள்ளது பெறலரும் பேருக மருவி புள்ளது. மையல் மருள்கள் யாவும் நீங்கிப் பூரணமாக மெய்யுணர்வு மேவிய பொழுது ஆ ன் மா அதனே அடைந்து அதிசய ஆனந்தம் நுகர்கிறது. யாவும் விட்டது வீடு என்றதல்ை அதன் பீடும் பெருமையும் தெரியலாகும். முன்னுள்ள மூன்றும் இம்மையிலேயே மனிதன் செம்மையாய் எய்தி அனுபவிக்க வுரியன. அவை ஈண்டு மனிதனே அளந்து அறிந்து தெளிந்து கொள்ளுதற்கு உரிமையாய் வந்தன. உழவு வாணிகம் முதலிய தொழில்களுக்கு வேலே ஆ8ளச் சேர்ப்பவரும் அந்த ஆளின் கிலேமை நீர் மைகளே முன்னதாக ஆய்ந்தறிந்தே சேர்த்துக் கொள்கின்றனர். பெரிய அரச காரியத்துக்கு ஆ&ளத் தேர்ந்து எடுக் கும் மன்னன் அவசீனப் பலவகையிலும் அளந்தறிந்து உளம் தெரிந்தே துனேயாக அமைத்துக் கொள்கிருன். திறம் தெரிந்து என்பதை அறம் முதலியவற்ருேடு தனித்தனியே கூட்டிக் குறிப்புகளே துணித்து நோக்குக. திறம்= வகை, கிலே; கூறுபாடு. 1. அறத்தின் திறம் தெரிதல், தரும நீதி தழுவி யுள்ளவன ? விதி விலக்குகளே வழுவறத் தெரிந்தவன : அந்த நெறிமுறையில் ஒழுகு பவன : அவ்வழியில் இவனுடைய முன்ஞேர்கள் ஒழுகி வந்துள்ளனரா? என்று இவ்வகையில் ஒர்ந்து உணர்தல். 2. பொருளின் திறம் தெரிதல். இவன் பொருள்வளம் உடையவன ? அதை ஈட்ட வல்லவளு? அதனை நெறிமுறையே போற்றி வாழ்பவளு? பொருள் நசையால் இழிவழிகளில் இழிபவளு ? என்று இன்னவாறு முன்னுற ஆராய்ந்து கொள்ளுதல். 335