பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2674 திருக்குறட் குமரேச வெண்பா 3. இன்பத்தின் திறம் தெரிதல். அருந்தல் பொருந்தல் முதலிய போகநுகர்வுகளில் இவன் விவேகம் உடையவன ? நெறியான முறையில் உள்ளவன ? நெறிகடந்து பிறர் மனைவியர்களே விழை தல் முதலிய இழிவுகள் படிந்தவன ? என இன்னவாறு அவனது வாழ்வைத் தெளிவாக எண்ணியறிதல். 4. உயிர் அச்சத்தின் திறம் தெரிதல். தொழில் செய்ய மூண்டபொழுது அவ்வழியில் நேர்கின்ற வருத்தங்களுக்கு வருந்துபவன : பிறர் புகுந்து ஏதேனும் இடையூறுகள் செய்ய நேரின் அவற் றிற்கு அஞ்சித் தளர்பவன ? " இது செய்ய நேர்ந்தால் உன் உயிர்க்கு இறுதி நேரும் ' என்று மாற்றலர் அச் சுறுத்தினும் அதற்கு அஞ்சாது வினைபுரியும் ஆண்மை யாளன ? என இன்னவாறு தேர்ந்து தெளிதல். இந்த நான்கு வகையிலும் பழுது படாமல் பாங் கோடு தேறி உயர்ந்து வந்தால் அவன் அரசுக்கு உரிய சிறந்த கருமத் துணேவனத் தெளியப்படுகின்ருன். தரும நீர்மை, செல்வச் சீர்மை, நெறிமுறை நேர்மை. யாண்டும் அஞ்சாத ஆண்மை ஆகிய இந்த மேன்மைக் குணமுடையவர்களேயே பான்மையுடன் ஆய்ந்து தனக்கு விழுமிய துணேயாக வேந்தன் விழைந்து உவந்து தெரிந்து தெளிந்து கொள்ளவேண்டும். பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த அருள் போகா ஆரறமென் றைந்தும்-இருள்தீரக் கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தல்ை தேறப் படுங்குணத்தி ன்ை. (சிறுபஞ்சமூலம் 59) அறம், பொருள், போகம், அஞ்சாமை, அருள். ஆகிய இந்த ஐந்தின் திறங்களிலும் உறுதியாய்ச் சிறக் துள்ளவனேயே தன் காரியத்துக்குச் சீரிய துணேவனுக வேந்தன் தேர்ந்துகொள்ள வேண்டும் என்று சங்கப் புலவராகிய காரியாசானும் இவ்வாறு கூறியிருக்கிருச்.