பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2676 திருக்குறட் குமரேச வெண்பா அறம் முதலிய நான்கின் திறத்தால் வினேயாளனே ஆராய்ந்து தெளியவேண்டுமேயன்றி, அரசன் மீது மரும மாய்க் குறைகள் கூறிக் குற்றங்களே ஏற்றி முன்னமே வந்து சேர்ந்து வினே புரிந்து வருபவனே வஞ்சமாய் மயக்கி மருட்ட நேர்வது சீராகாது. பலவும் ஆராய்ந்து கிலேமையைக் கூர்ந்து சிந்தித்துக் கொள்ள வேண்டும். தேர்ந்து கொளல் என்று விதிமுறையாய்க் கூருமல் தேறப்படும் என்று செயப்பாட்டு வாப்பாட்டால் குறித் திருக்கிரு.ர். அரசர் தேர்ந்தெடுக்கும் மரபு முறையை இது உறவாயுணர்த்தியுளது. செய்யும் என்னும் வினே முற்று ஆண்பால் ஒருமையில் வந்து வினேயாளனேச் சுட்டி கின்றது. அமைச்சர் தூதர் ஒற்றர் படைத்தலைவர் முதலி யோர் அரசனது ஆட்சிக்கு உ ரி ய மாட்சிமையான விளேயாளர்கள். இத்தகையோரை வித்தக விவேகமாப் ஒர்ந்து தேர்ந்து வேந்தன் தழுவிக் கொள்ளின் அந்த ஆட்சிமுறை துறைகள் தோறும் சிறந்து விழுமிய கிலேயில் யாண்டும் உயர்ந்து விளங்கி வரும். கருமத் துணேவர் தக்கவராய் அமையின் அந்த ஆட்சி எவ்வழியும் செவ்வையாய் நடந்துவரும்; வரவே மாந்தர் மகிழ்ந்து வாழ்ந்து வருவர் நாடு வளமாய்ச் செழித்துவரும். வேந்தன் வியனுப் விளங்கி வருவன். இவ்வகையான உயர்வுகள் எல்லாம் வினேயாள ரைத் திறந்தெரிந்து தேர்ந்து கொள்வதால் வாய்ந்து வருதலால் அத்தேர்வு ஈங்கு உரிமையோடு ஆய்ந்து கொள்ள வந்தது. தரும நீர்மை நேர்மை ஆண்மை முதலிய சீர் மைகளே யுடையவனேத் தனக்கு அமைச்சனுகத் தெளிந்து அரசன் தழுவிக் கொள்வன். அவல்ை ஆட்சி மாட்சிமையாம். இது நிமித்திகன் பால் தெரிய வங்தது. ச ரி தம். இவன் ஏமாங்கத நாட்டிலே நேரி என்னும் ஊரில் இருந்தவன். தெளிந்த மதிமான்: சிறந்த நீதிமான்.