பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2678 திருக்குறட் குமரேச வெண்பா படுபழி மறைக்க லாமோ பஞ்சவர் அன்று பெற்ற வடுவுரை யாவர் பேர்ப்பார்? வாய்ப்பறை அறைந்து தூற்றி இடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம் நடுவுநின் றுலகம் ஓம்பல் நல்லதே போலும் என்ருன். (5) (சீவக சிந்தாமணி) காமத்தின் இழிவுகளே நயமாய் எடுத்துக் காட்டி அரசனுக்கு இவன் புத்தி போதித்திருக்கும் நிலைமை கீர்மைகளே இதில் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். கவிகளில் குறித்துள்ள பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். அரசன் நெறிபிறழ்ந்து இழிய நேர்ந்தமையால் அரசை இவன் துறந்து போயி ன்ை. இவனுடைய தரும நீதிகளையும் மனவுறுதிகளே யும் வியந்து மறுபுல மன்னர்களும் புகழ்ந்து வந்தனர். அறம் பொருள் முதலிய நிலைகளில் திறம் தெரிந்து தேறப் படுபவனே சிறந்த மந்திரியாய் உயர்ந்து விளங் குவான். அவனே ஆட்சிக்கு உரிய மாட்சிமையாளன் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து நின்றது. உள்ளம் தெளிந்த உரவோனே வேந்தன்தன் உள்ளம் உவந்து கொளல். அறவனே ஆய்ந்து கொள்க.

==

502 பண்டு கபிலரைநேர் பார்த்தவுடன் பாரியேன் கொண்டு தெளிந்தான் குமரேசா-கொண்ட குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நானுடையான் கட்டே தெளிவு. (உ) இ-ள். குமரேசா : குலநலமும் குணநலனும் உடைய கபில ரைப் பாரி ஏன் உவந்து தெளிந்து கொண்டான்? எனின், குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாண்" உடையான் கட்டே தெளிவு என்க. தெளிய வுரியாரை இது தெளிவித்துளது. நல்ல குடியில் பிறந்து குற்றங்கள் இன்றிப் பழிக்கு