பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிந்து தெளிதல் 2679 அஞ்சுகிற ந | ண ம் உடையவனிடமே அரசனது தெளிந்த தேர்வு சிறந்து அமைந்துள்ளது. தனக்கு உறுதித் துணேயாக வேந்தன் தேர்ந்து தெளிந்து கொள்ள உரியவரை இன்னவாறு குறித்துக் காட்டியுள்ளார். வரிசை அறிவதே அரசு முறையாம். முன்பு அறம் பொருள் இன்பம் அச்சம் ஆகிய நான்கு வகையால் வினேயாளரைத் தெளிக என்ருர். இதில் குடிப் பிறப்பு முதலாக நான்கு குறித்துள்ளார். முன்னது எல்லார்க்கும் பொது: பின்னது சிறப்பு. ஆகவே சோதனேக் கருவிகள் எட்டு ஈண்டு எண்ண வந்துள்ளன. தேர்வுகள் சீராய்த் தெரிய கின்றன. மனிதப் பிறப்பினர் எல்லாரும் குடியில்தான் பிறந்து வருகின்றனர். வந்தும் குடிப்பிறப்பு எனது தனியே சிறப்பாகப் பிரித்து உயர்ந்த மதிப்போடு நூலோரும் மேலோரும் வழங்கி வருகின்றனர் சிறந்த குடி எது ? அந்தச் சிறப்பு அதற்கு எப்படி வந்தது? அன்பு அறிவு மானம் வீரம் வாய்மை துய்மை நேர்மை சீர்மை முதலிய நீர்மைகள் எந்த மனிதரிடம் பரம்பரையாய் வளர்ந்து வருகின்றனவோ, அக்த மச பினர் பிறந்து வருகிறகுடி உயர்ந்த குடி என ஒளி பெற்று உலகம் போற்றச் சிறந்து வந்துள்ளது. ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். (குறள் 952) குடிப் பிறந்தாருடைய சி ற ங் த இயல்புகள் இவ்வாறு செவ்வையாக அறிய வங்துள்ளன. வாய்மை சீலம் நாணம் முதலிய நீர்மைகள் அவ ரிடம் வழுவாமல் அமைந்துள்ளன என்றமையால் அவ ரது விழுமிய நிலைமையும் அவரால் உலகம் அடைந்து வரும் பலன்களும் நலமாய்த் தெரிய கின்றன. குடிப்பிறப் புடுத்துப் பனுவல் குடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் துாய்மையின்