பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி த ல் 269 1 கெல்லுக்கு உமி, நீர்க்கு துரை, பூவுக்கு இதழ் புல்லி யிருத்தல் போல் மனிதனிடமும் சிறு சிறு குற்றம் உண்டு; ஆயினும் உறவாத் தழுவிக் கொள்ளவேண்டும். உமி உடையது என்று அரிசியைத் தள்ள நேர்ந்தால் பட்டினி கிடந்து பதைக்க நேரும்; குற்றம் உடையவன் என்று ஆளேத் தள்ளிவிட நேரின் வினேயாள் கிடையாது; ஆகவே அரச காரியம் கெட்டுப்போம். நீர்போல் நிறைந்த குணமும், துாைபோல் சிறிய குற்றமும் இருந்தால் அவரை உவந்து போற்றிக் கொள்ள வேண்டும். குற்றம் குறையக் குணமே விட அருளே உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே. (1) கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கெனவே சுற்றும் தொழில்கற்றுச் சிற்றின் பத் துடு சுழலின் என்னும்? குற்றம் குறைந்து குணமே லிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணையென நம்புகண்டாய் சுத்த மூடநெஞ்சே ! (2) (தாயுமானவர்) குணம் நிறைந்து கு ற் ற ம் குறைந்துள்ளவரே உயிர்க்கு இனிய உறவினர்; அவரையே முற்றும் துனே என நம்பு என்று தம் மனத்தை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு இதமாய் இனத்தைக் கூறி யிருக்கிரு.ர். குணம் காடிக் குற்றமும் காடித் தக்கவரைத் தழுவிக் கொள் என்ற இக்குறள் அவர் உள்ளத்தில் தோய்ந் திருந்து இவ்வாறு உருவெடுத்து வந்துள்ளது. குணத்தை முதலில் குறித்தது அதன் தலைமை கருதி. முதன்மையாக நாட வுரியதும் தயக்க வுரியதும் அதுவே. குற்றமும் என்றதிலுள்ள உம்மை அதன் இழிவை உணர்த்தி முன்னதையும் தழுவி நின்றது. குனனும் குடிமையும் குற்றமும் குன்ரு இனனும் அறிந்தியாக்க நட்பு. (குறள் 793) பின்னரும் இன்னவாறு தேர்தலைக் குறித்துள்ளார் நாட்டு மக்களே நன்கு பாதுகாத்துவரும் அரசன் குணநலமுடையவனுயிருப்பன்: அவன் உவந்து தெரிந்து தெளிந்து கொள்ள வுரியவன் குணநிறை வுள்ளவனே