பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2696 திருக்குறட் குமரேச வெண்பா அருமந் தற்றம் அகற்றும் வில்லியார் ஒருமைந் தற்கும் அடாத துன்னினர்; தருமம் பற்றிய தக்க வர்க்கெலாம் கருமம் கட்டளை என்றல் கட்டதோ ? (இராமா, கிட் கிந், அரசியல் 16) இராமன் சிறந்த குலமகன்; உயர்ந்த பெருந்தகை; அரிய தருமவான்; புெரிய நீதிமான். அத்தகைய உத்தமன் வாலியை மறைந்து கின்று அம்பு எய்து கொன்ருனே : இச்செயல் அவன் இயல்புக்கு ஒக்குமா? ஒருவனுடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவன் செய்யும் கருமமே கட்டளைக் கல் என்று மேலோர் கட்டளே யிட்டுள்ளனரே! அது இவன் வகையில் பொய் யாய்ப் போயதோ ? என வாலியின் மனைவி இவ்வாறு மறுகிப் புலம்பி யிருக்கிருள். மெய்யான தரும வீரனது கருமம் தேவ ரகசியமாய் இங்கே மருவியுளது. தேவர் வாய்மொழியை இது மேவி வந்துள்ளது. அந்த உண்மையை உரைக் குறிப்புகளால் ஒர்ந்து காவியக் கவியின் தலையைத் தேர்ந்து கொள்கின்ருேம். பெருமை சிறுமை அளந்துகொளப் பேணும் கருவி தத்தமது கருமம்; அதுபோல் பிறகருவி கழியத் சிறந்த அல அறிக; மருவு காத லால் அறியார் மாட்டு வினையை வையற்க; ஒருவர் தமையும் தேராமே ஒரு காலத்தும் தெளியற்க. (விநாயக புராணம்). இதனே ஈண்டுச் சிந்தித்துக் கொள்ள வேண்டும். முன்பு குணம் குற்றங்களைக் கூர்ந்து அறிந்து கொள்க என்ருர்: இதில், பெருமை சிறுமைகளைத் தேர்ந்து தெளிந்து நல்லவரைச் சேர்க என்கின் ருர். தன்னைப் பெரி ய வ ைக உயர்த்திப் பிறர்க்கும் இனிமை பயந்து வருகிற தன்மைகளே யுடையவன் பெருந்தகையாளய்ை விளங்குகிருன். தன்னைச் சின்னவ. ளுக்கி இன்னல் புரியும் இயல்புகளேயுடையவன் சிறிய வன யிழிகிருன். சிறுமையாளனைத் துணைக்கொண்டால் இருமையும் சிறுமையாம். அவனே அருகே மருவலாகாது.