பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க்து தெளி த ல் 2699 வதிசரனும் மதிமிகுந்து வடுவஞ்சி மாண்பமைந்து மகிமை பெற்ருன்; அதிமேன்மை கீழ்மையெலாம் அவரவர்தம் செயல்வழியே அமையும் அம்மா ! செய்யும் செயலே சிறுமை பெருமைகளை ஐயமறக் காட்டும் அளந்து. ஆளே வினேயால் அறி. 506 சென்றுநின்ற நீலியை முன் தேர்ந்தார் பழியடைந்து குன்றிநொந்தார் பின்பேன் குமரேசா-ஒன்றியகேள் அற்ருரைத் தேறுதல் ஒம்புக மற்றவர் பற்றிலர் நானர் பழி. (சு) இ-ள் குமரேசா : கிலேயற்ற நீலியை நல்லவள் என்று தேர்ந்தவர் பின்பு ஏன் அல்லலுழந்து அழிந்தார்? எனின், அற்ருரைத் தேறுதல் ஒம்புக; மற்றவர் பற்று இலர் பழி காணுர் என்க. தேரு தவரை இது தேற்றி யுள்ளது. ஒழுக்கம் உறவு இல்லாதவரைத் தேருது விடுக; அவர் பிறர்பால் அன்பு புரியார்: பண்பு படியார்: பழிச் செயல்களுக்கு நாணி ஒடுங்கார். அற்ருர் என்பது பொருள் அற்ற வறியாரையே பெரும்பாலும் குறித்துவரும். அற்ருர் அழிபசிதீர்; அற்ருர்க்கு ஒன்று ஈ என்று முன்னும் பின்னும் வந்துள்ள மையால் இந்த உண்மையை உணர்ந்து கொள்கிருேம். ஈண்டு அது எதைக் குறித்துள்ளது ? எது அற்ருர் ? அறிவற்ருர்: கல்வி அற்ருர்: ஒழுக்கம் அற்ருர், சுற்றம் அற்ருர்; பரிவு அற்ருர், பண்பு அற்ருர் என இன்ன வாறு பலவகை நிலைகளேயும் உய்த்துணரவுற்றுளது. தன்னுடைய காரியங்களே நன்கு கருதிச் செய்ய -வுரிய அதிகாரியை அரசன் ஆராய்ந்து தேர்ந்து எடுக் குங்கால் அவனுடைய பான்மை மேன்மைகளைக் கூர்ந்து