பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிக் து தெளி தல் 2701 தேறுதல் ஒம்புக=தெளிதலே ஒழிக. சரியாகத் தெரியாமல் யாரையும் தேருதே, மயலான தேறுதல் துயராய் வரும்; ஆதலால் அதில் இருந்து விலகி நயமாய் உன்னைப் பாதுகாத்து கொள்ளுக. தேர்ந்து தெளிவதில் ஆர்ந்த மதியூகம் தோய்ந்து வருவதே நலமாம். பற்று= அன்பு: பாசம். பழி=வசை. அமைந்த குடும்பத்தாரிடம் அன்பும் ஆர்வமும் படிந்துவரும் பண்பாளனே பிறரிடம் ப. ரி வு மருவி யிருப்பன் பழி யிழிவுகளுக்கு அஞ்சி விலகுவன். அஷ் வன்கயான செவ்வியோனேயே எவ்வழியும் தெளிவாய்த் தேறுக; அல்லாதானே யாதும் தேருது விடுக. ஆராயாமல் தெளியநேரின் அது பெரிய அவலமாம். இந்த உண்மை நீலிபால் நேரே தெரிய வங்தது. ச ரி தம். இவள் திருவாலங்காட்டிலே வேளாளர் குலத்திலே புரிசைக்கிழான் என்பவனுக்குப் புதல்வியாய்ப் பிறங் தாள். பருவம் எய்தினுள், பழவினை வயத்தால் அறிவு திரிந்து அனைவரையும் பிரிந்து தனியே அலேந்தாள். பிசாசின் ஆவேசம் இவளிடம் பெருகியிருந்தது. வேண் டியபொழுது வேண்டிய உருவங்களே எடுத்து யாண்டும் சென்று அல்லல் இழைத்து வந்தாள். வருங்கால் ஒரு நாள் தரிசனன் என்னும் வணிகன் ஒருவன் வாணிகத் தின்பொருட்டு அவ்வழியே வந்தான். அவனுடைய ம&னவிபோல் வடிவம்கொண்டு அவனைப் பின் தொடர்ங். தாள். அவன் திரும்பி பார்த்தான்; முதலில் மயங்கி ன்ை; பின்பு கலங்கின்ை. பெண் பேய் ஒன்று அப்பக் கங்களில் திரிந்து படர்புரிந்து வருகிறது என்று கேள்வி யுற்றிருந்தான் ஆதலால் அழகிய மங்கைபோல் வந்த அவ&ளக் கண்டதும் கடுகி கடந்தான். பொழுது அடையு முன்னே பழையனூர் என்னும் பதியை அடைந்தான். அவளும் கூடவே புகுந்தாள். அவ்வூர்த் தலைவர்களிடம் முறையிட்டாள்; பெரியோர்களே! இவர் என் கணவர்: என் இனத் தனியே தள்ளிவிட்டு வே று ஒருத்தியைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று இப்படி