பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3704 திருக்குறட் குமரேச வெண்பா அவகேடுகளே கினைந்து அறிவாளிகள் வருந்துவர். தேர்ந்து தெளியாத தனது மடமையால் விளைந்த பிழை களை எண்ணி மன்னனும் இன்னலுழந்து இனங்து மறு குவன் ஆதலால் பேதைமை எல்லாம் தரும் என்ருர், அறிவு அறியார் என்றது காரியங்களேச் செய்ய வுரிய அறிவுகள் நன்கு தெரியாதவரை. தேர்ந்த அறி வுடையாரையே தேச காரியங்களில் நியமிக்கவேண்டும். தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனில்லா முற்றலே நாடிக் கருமம் செயவையார்; கற்றென்றறிந்து கசடற்ற காலையும் மற்றதன் பால்தேம்பல் நன்று. (பழமொழி 378) தெளிந்த அறிவுடையாரையே தேர்ந்து எடுத்துக் கருமம் செய்ய வைப்பர்; அறிவில்லாரை வைத்துக் கொள்ளார். கற்று அறிந்திருந்தாலும் குற்றம் உடை யாரைக் கூடாமல் இருப்பது நல்லது என்னும் இது இங்கே, கூர்ந்து அறிந்து கொள்ள வுரியது. விர்ைக்குரிய அறிஞரைத் திறந்தெரிந்து தெளிந்து கொள்ளுவதே மேதைமையாம்: அறியாரைத் தேறுவது பேதைமையாய்ப் பிழைபடும் தன் கடமையைக் கருதிச் செய்யாத மடையன் என்று வையமும் அவனே வையும். எவருடைய நிலைகளையும் தவருமல் தெளியவுரிய அரசன் எவ்வழியும் தெளிவுடையயிைருக்க வேண்டும். காமக்களிப்பு மிகின் நேமத் தெளிவு நிலை குலையநேரும். காதல் ஆகிய இருளால் மயங்கிய பொழுதுதான் பேதைகளைப் பிழையாய்ச் சேர்க்க நேர்வன் என்பது காதன்மை கந்தா எ ன் னு ம் குறிப்பு மொழிகளால் கூர்ந்து உணர வந்தது. பல்லாயிரக் கணக்காய் எங்கும் பரந்து விரிந்துள்ள மக்களைப் பாதுகாத்து நாட்டை ந ன் கு புரக்கவல்ல வேந்தன் எவ்வழியும் செவ்வியன யிருக்க வேண்டும். மக்களுக்குத் தாய் போல மாந்தருக்கு வேந்தன் உளன்.