பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.08 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பும்; ஆதலால் கள்ளத்தின் வினேவெலாம் கருத்திலா இருட் பள்ளத்தின் அன்றியே வெளியிற் பல்குமோ? (2) கொல்லுமின் இவனே என்று அரக்கன் கூறிய எல்லேயில் தூதரை எறிதல் என்பது புல்லிது; பழியொடும் புனரும்; போர்த் தொழில் வெல்லலாம் பின்னே என்று இடை விலக்கினன். (3) மாதரைக் கோறலும், மறுத்து நீங்கிய ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும் து தரைக் கோறலும், துாய் தன் ரும்என ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டின்ை. (4) எல்லியில் யான் இவன் இரண மாளிகை செல்லிய போதினும் திரிந்த போதினும் நல்லன நிமித்தங்கள் நனிந யந்துள அல்லதும் உண்டுநான் அறிந்தது ஆழியாய் ! {5} நிந்தனே நறவமும் நெறியில் ஊன்களும் தந்தன கண் டிலென்; தரும தானமும் வந்தனே நீதியும் பிறவும் மாண்பமைந்து அந்தணர் இல் எனப் பொலிந்தது ஆழியாய் ! (GY (இராமா, விபீடணன்) அதிசய மதிமானை அ னு மா ன் இராமபிரானே நோக்கி இவ்வாறு பேசி யிருக்கிருன். மனிதருடைய இயல்புகளையும் உள்ள நிலைகளேயும் உரை செயல்களே யும் முறையே விளக்கி நேரே தான் கண்ட அனுபவ. வகைகளேயும் துலக்கி ஈண்டு வந்துள்ளவன் நல்லவனே என்பதை நயமாய்க் காட்டியுள்ளான். கவிகளில் மருவி யுள்ள பொருள் நயங்களேயும் கருத்துக்களையும் குறிப் புக்களையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். உற்ற துணேவர்களுடைய உறுதி மொழிகனேக் கேட்டுத் தானும் உய்த்துணர்ந்தபின்பே அக்கோமகன் வீடணனைச் சேர்க்க நேர்ந்துள்ளான். தேர்ந்து தெளி: வது மாந்தர் இயல்பு என்பதை அவ்வேந்தர் பிரான் யாண்டும் நன்கு விளக்கி நலம் புரிந்து வந்துள்ளான்.