பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வினை யாடல் 2723 வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. (பழமொழி 104) தனக்கு வேண்டிய வினையாளரை அரசன் தேர்ந் தெடுக்கும் விதத்தை முன்றுறையரையர் இங்ங்னம் குறித்திருக்கிருர், நாயனர் வாய்மொழியை இதுவும் நயந்து வந்துள்ளது. பொருள் வகைகளைக் கருதியுணர் பவர் உரிய நிலைகளைத் தெரிந்து தெளிந்து கொள்வர். விரிந்து பரந்த நிலமண்டலத்தை ஆண்டு வருகிற வேந்தனுக்கு உரிய காரியங்களே உரிமையாய்ச் செய்ய வல்ல கருமவீரர்கள் பலர் வேண்டும் ஆதலால் அவரது கிலைமை நீர்மைகளேப் பலவகையிலும் கூர்ந்து ஆய்ந்து தேர்ந்துகொள்ள அவன் நேர்ந்து நிற்கின்றன். தனக்கு நலமாய், நாட்டு மக்களுக்கு இதமாய், வினே யாற்றல்களில் வியனை திறமாய் விளங்கி நிற்ப வனேயே தலைமையாய் அவன் தழுவிக் கொள்கிருன். வினையாளரைத் தேர்ந்து தெளியும் பாங் கு ஈங்கு ஒரு தேர்தல் காட்சியாய் உணர வந்துள்ளது. வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் ஒருவ னுலே தாங்கலாம் தகைமைத் தன்று; தளேயவிழ் தயங்கு தார்ச்சீர்ப் பாங்கலார் பணியச் சூழும் நூல்வலார் பாகம் ஆகப் பூங்குலாம் அலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே. (சூளாமணி, மந்திரம்) இந்தக் கவியின் பொருளேக் கருத்துரன்றிக் கவனி யுங்கள். உலகத்தைக் காக்கும் அரசனுடைய கிலேமை தலைமைகளே இது நன்கு விளக்கியுள்ளது. கல்வியறிவும் கல்ல சூழ்ச்சித்திறனும் வாய்ந்தவர் தனக்கு உறுதித் துணையாக வாய்த்த அளவுதான் அந்த அரசனது ஆட்சி மாட்சியுற்று வரும் என்பது இதில் காட்சியுற வந்தது. நாட்டை ஆளும் அரசனல் நலமா நாடிக் கொள்ளப் படுபவரது பீடும் பெருமையும் ஈண்டு ஒர்ந்து உணர வந்துள்ளன. நாடுதல் அறிவாற்றலையும், நலம் புரிதல் வினை ஆற்றலையும் விளக்கி நின்றன. நல்ல அறிவுள்ள வரையே அமைச்சராக அரசன் ஆக்கிக் கொள்கிருன்.