பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. .ெ த ரி க் து வி இன யாடல் 2725 நின்னெடு வாரார் தந்நிலத்து ஒழிந்து 10 கொல்களிற் றியானே எருத்தம் புல்லென வில்குலே அறுத்துக் கோலின் வாரா வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர் அரசுவா அழைப்பக் கோடறுத்து இயற்றிய அணங்குடை மரபிற் கட்டில்மேல் இருந்து தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி புறம்படின் அல்லது மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபிற் கடவுள் அயிரையின் நிலை இக் கேடில வாக பெரும நின் புகழே. (பதிற்றுப்பத்து 79) இன்னவாறு அம்மன்னனுடைய அறிவு ஆண்மை வண்மை திண்மை முதலிய குணநலன்களேப் புகழ்ந்து இவர் பாடியுள்ளார். இ த ற் கு ஒன்பது நூருயிரம் பொன்னும் ஒரு சிங்காதனமும் அவ்வரசன் இவருக்குப் பரிசில் வழங்கின்ை. அரியனே அரசுக்கே உரியது என்று அதை இவர் திருப்பிக் கொடுத்து விட்டார். இவரது பண்பை வியந்து அனேவரும் அன்பு கூர்ந்தனர். கலம் தீங்குகளே நாடியறிந்து யாண்டும் நன்மை புரியும் தன்மை யுடைவனே அமைச்சகை ஆளப்பெறுவான் என்பதை உலகம் இவ்ர்பால் உணர்ந்து மகிழ்ந்தது. ‘‘மன்பதை காப்ப அறிவுவலி யுறுத்தும் நன்றறி உள்ளத்துச் சான்ருேர்’’. (அரிசில்கிழார்) மந்திரிகளுடைய மாட்சிமைகளே இவர் இவ்வாறு குறித்திருக்கிருர். மாந்தரை எங்கும் நன்கு பாதுகாத்து வரும்படி வேந்தருக்கு அறிவு கலன்களே வலியுறுத்திப் போதித்து, எவ்வழியும் கன்மைகளையே செவ்வையாக நாடித் தெளிந்துள்ள உள்ளத்தையுடைய சான்ருேர் என்று அமைச்சரை இவ்வண்ணம் இவர் உணர்த்தி யிருப்பது ஈண்டு ஒர்ந்து சிந்திக்க வுரியது. உள்ளத்தில் துய்மை உணர்வுறுதி வாய்மைகலம் உள்ளவனே கல்ல துணை. நலம்புரிபவன் நல்ல வினேயாளன்.