பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2726 திருக்குறட் குமரேச வெண்பா 512 தெள்ளுபுகழ் அக்குரூரன் தேர்ந்தேன் பெருவளங்கள் கொள்ளவினே செய்தான் குமரேசா-உள்ளி நின்று வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினே. (ഉ_) இ-ள். குமரேசா : உறுவதை ஒர்ந்து வளங்களே வளர்த்து அக்குரூரன் ஏன் வினைசெய்து வந்தான்? எனின் வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை ஆராய்வான் வினே செய்க என்க. தொழில்செய்ய உரியவனே இது துலக்கியுளது. வருவாய்க்கு உரிய வழிகளே விரித்து நிலங்களே வளமுறச் செய்து நேர்ந்துள்ள கிலேமைகளே ஆராய்ந்து அறிய வல்லவன் அரச காரியம் புரிய வுரியவன். வாரி=பொருள் பெருகி வருகிற வழி. வரவையுடையது வாரி என வந்தது. வாரி பெருகப் பெருகிய காதலே வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி அறஅறும் வார்புனல் ஆற்றின் வகையும் புரைப. (வளேயாபதி) புதுப்புனலும் பூங்குழையார் ந்ட்பும் இரண்டும் விதுப்பற நாடின் வெ றல்ல-புதுப்புனலும் மாரி யறவே அறுமே; அவர் அன்பும் வாரி அறவே அறும். (நாலடியார்) பொருள் வருவாய் உள்ளவரையும் விலைமகளிர் உறவு உரிமையாய்த் தோய்ந்து வரும்: வாரி அறின் அவரது வாரமும் அறும் என இவை குறித்துள்ளன. இவற்றுள் வாரியின் பொருளே அறிந்து கொள்கிருேம். பொருள் வருவாயை முதலில் குறித்தது, எல்லாப் பெருமைகளுக்கும், ஆட்சியின் மாட்சிக்கும் மூல ஆதார மாயிருக்கும் அதன் முதன்மை கருதி. உழவு வாணிகம் ஒவியம் போக்குவரத்து முதலிய தொழில்கள் எங்கும் விரிந்து பரந்திருக்கின்றன. அவை