பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.32 திருக்குறட் குமரேச வெண்பா யது. இயல்பாகவே பகைமை கொண்டிருந்த அஷ் வேந்தன் படைவீரர்கள் புடைசூழ யானைமேல் வருவ தைக் கண்டதும் சேரன் திகைத்தான். அங்கேயிருந்த இவர் அவனுக்கு உரிமையோடு உண்மையை உரைத் தார். இவருடைய உரைகள் பரிவும் பண்பும் தோய்ந்து அறிவு நலங்கள் சுரந்து வந்தன. அயலே வருவனகானுக. இவன் யார்? என்குவை யாயின், இவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணே கிழித்த பகட்டெழில் மார்பின் மறலி யன்ன களிற்று மிசையோனே; 5 களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே; நோயில கிைப் பெயர்கதில் அம்ம! 10. பழன மஞ்ஞை யுகுத்த பீலி கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளேந்த கள்ளின் விழுநீர் வேலி நாடுகிழ வோனே. (புறம் 13) இவன் சோழ மன்னன்: மதமீறிய யானேயால் கிலே மாறி இவ்வூரை அணுகினன். யாதொரு ஊறுமின்றி இவன் சுகமே செல்வாகை என்று இவர் கூறிய இந்த அறிவுரைகளேக் கேட்டதும் அவன் பகைமை நீங்கினன். வளவனே உவந்து உபசரித்தான். இரு பெரு வேந்தரும் நண்பராய் இன்புறலாயினர். இவரது பண்பாட்டால் நேர்ந்த பலன் என்று இருநாட்டாரும் இவரைப் புகழ்ந்து போற்றி உவந்து வாழ்த்தினர். இவருடைய இனிய நீர்மைகளே வினவி யறிந்து ஆப் என்னும் குறுகில மன்னன் இவரை விழைந்து அழைத்துத் தன்னுடன் வைத்து உவந்து உபசரித்து வந்தான். யாரிடமும் காணுத பெருந்தகைமையும் பெருங்கொடையும் பேரரு ளும்அவனிடம் இயல்பா யமைந்துள்ளதைக் கண்டு.இவர் ஆர்வ மீதுர்ந்தார். அவ்வள்ளலே முன்னமே காணுமல் கழிந்ததை எண்ணி இவர் உள்ளம் இசங்கினர்.