பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2734 திருக்குறட் குமரேச வெண்பா முன்பு குறித்த அன்பு அறிவு துணிவு நசையின்மை குடிப்பிறப்பு குணச்சிறப்பு படிப்பு பயிற்சி முயற்சி பழக்கம் பண்பாடு முதலிய எல்லா வழிகளாலும் கூர்ந்து ஒர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து நல்லவர் என்று தழுவிக் கொண்டாலும், பின்பு பொல்லாதவ. ராய்த் திரிந்து வேறுபட்டு விபரீதங்களே விளேப்பவர் பல பேர்கள் யாண்டும் கிலேயாய் இருக்கின்றனர். அந்த உண்மையை ஈ ண் டு உணர்த்தியது, கன் மையை நாடிக் கொள்ள. மனிதர்களுடைய மாறுபாடு கள் அதிசய மருமங்களாய் மருவியுள்ளன. மாந்தர் என்பது பன்மைப் பெயர். மனிதத்திரள்களே யெல்லாம் ஒருங்கே குறித்து வருகிற இதனே ஈங்கு உரைத்தது ஏன்? எனின், யாவும் கூர்ந்து ஒர்ந்து தெளிய என்க. சிலர் என்னுமல் பல ர் என்றது வேறுபடுகிற தொகையின் மிகுதி தெரிய, நெஞ்சம் திரியாத நேர்மை யாளர் அருகி யுள்ளனர்; அல்லாதவரே எங்கும் பெருகி இருக்கின்றனர். தேர்ந்து தெளியும் வரை செம்மை யுடையராயிருந்து, தெளிந்து காரியத்தில் வைத்தபின் அதிகாரமமதையும், பொருளாசையும், மண்டி மருளாாய் மாறுபட்டு நம்பினவர்க்கு மோசம் செய்யும் நாசகாரிகள் பலர் நாட்டில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியிருக்கிரு.ர். வினையாளர் எவரையும் மிக்க எச்சரிக்கையுடன் யாண்டும் வேந்தன் கண்காணித்து வரவேண்டும் என் பதைக் கருதியுணர இவ்வுறுதி மொழியை ஈண்டு இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மனிதர் நிலையற்ற நெஞ்சினர்; சார்ந்த சார்புகளால் நேர்ந்த கிலேகளால் மாறுபாடுற்று வேறுபடுபவர். நேரே கண்டால் நண்பர்போல் நயந்து பேசுவர் காணுதபோது வினே இகழ்ந்து கூறுவர். விண்டுழி ஒரு நிலே நிற்பர்; மெய்ம்முகம் கண்டுழி ஒரு நிலே நிற்பர்; கைப்பொருள் கொண்டுழி ஒருநிலே நிற்பர்; கூழுடன் உண்டுழி ஒருநிலை நிற்பர் உற்றவர். (இராமாயணம் 6-4)