பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2752 திருக்குறட் குமரேச வெண்பா மையால் அவரது பண்ணேயைப் பலவழிகளிலும் செழிக் கச்செய்து இவன் விருத்திசெய்து வந்தான். முதலியார் இடையே கால மாயினர். அவருக்கு மகன் இருந்தான். அவன் பெயர் பூபதி. அந்தச் சிறுவனப் படிக்கவைத்து சிறந்த அறிவாளியாய்த் தெளிவுறச் செய்தான். அவன் பருவம் அடைந்தபின் இவனுடைய உரிமை உதவிகளே வியந்து உவந்து நன்றி பாராட்டி நலம் பல புரிந்தான். ஏகன் என்பவனே வாணன் இனிய ஓர் துணையாக் கொண்டான்; வாகைமீக் கூர்ந்து வந்தான் வளங்களும் பெருகி வந்த; யூகமும் வஞ்சம் இல்லா உள்ளமும் உடையான் நண்பன் ஆகவே வாய்த்தால் அன்ன்ை ஆக்கமேல் வளரும் அன்றே. இவ்வாறு உலகம் போற்றிவர இவன் உயர்ந்து நின்ருன், அரிமுகர். இவர் பாண்டி நாட்டிலே பன்றிமலே என்னும் பதி யில் இருந்தவர். மதிநலம் வாய்ந்தவர். பன்றி முகமும் மனித உருவும் மருவிப் பன்னிருவராய் இவர் மன்னி பிருந்தார். பழைய ஒரு சாபம் அற்று இறைவன் அருள் பெற்று விழுமியராய் . இவர் விளங்கி நின்ருர். இவரது நிலைமையைப் பாண்டிய மன்னன் அறிந்தான். அமைச்சரை விடுத்து அழைத்துவரச் செய்தான். வந்து வனங்கிய இவரைக் கண்டு அ ர ச ன் உவந்தான். தெளிந்த அறிவும் சிறந்த ஆண்மையும் உயர்ந்த சொல் வன்மையும் உடைய இவரை வினேயாளரா விழைந்து கொண்டான்; வேண்டிய பெருமைகளே உரிமையுடன் செய்தான். பாண்டிய மன்னன் செய்த பண்பாடுகளே யாவரும் வியந்து பாராட்டி உவந்து வந்தனர். வந்தி றைஞ்சிய வராகமா மைந்தரை நேர்கண்டு அந்த மில்களிப் படைந்துவேந்து அமைச்சியற் கிழமை தந்து வேறுபல் வரிசையும் தக்கவா நல்கிக் கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர். (1)