பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.56 திருக்குறட் குமரேச வெண்பா யாரையும் எளிதில் நம்பும் பேதைமையும் இவனிடம் பெருகி இருந்தது. தாபதர் என்னும் பெரியவர் ஒரு வரைப் பேரன் போடு இவன் போற்றி வந்தான். அவர் கருமத் த லே வ ரா யு ம் மதிமந்திரியாயும் குருவாயும் அமர்ந்து இவனுக்கு உறுதியுண்மைகளே உரிமையோடு உரைத்து வந்தார். அரசன் வணங்கி வழிபட்டுப் போற்றி வந்தமையால் நாட்டில் அவர்க்கு மதிப்பு மிகுந்து வந்தது. இதைக் கண்டு சி ல ர் பொருமை கொண்டனர். அமையம் பார்த்துக் கோள்கள் மூட்டினர். திய கோளர் வாய்ச்சொல் இவனது துரய உள்ளத்தை யும் பழுது படுத்திப் பாழாக்கியது. தெளிந்த ஞான சிலரான அவர்மேல் இவன் பொழிந்து வந்த அன்பு புலேயாய் மாறியது. வேறுபாடு மண்டி மாறுபட்டு இவன் மதிமருண்டு வருவதை அறிந்ததும் அப்பெரிய வர் பதியை விட்டு அகன்ருர். ஞான ஒளி நீங்கவே ஈன இருள் எங்கும் படர்ந்து ஓங்கியது. அரிய செல்வ வளங்கள் குறைந்தன. வறிய கிலேகள் வந்து புகுந்தன. பெரியவரை இழந்ததால் பேரிழவு வந்ததென்று அறி வாளிகள் யாவரும் பரிதாபமாய் இவனே வைய நேர்ந்த னர். விரிவை இலிங்க புராணத்தில் அறிக. அரிய தாபதர் அறிவருள் அமைந்தவர் குடன்பால் பெரிய மந்திரி யாகிமுன் பிருந்தவர் பிழையாய் உரிய கேண்மையை உவந்திலன் எனவுணர்ந் தகன்ருர் கரிய தீமைகள் விளேந்தன; கழிந்திவன் ஒழிந்தான். உரிய பெரியவர் உறவை உ வ ங் து பேணுமல் வேருய் கினேங்து மாறுபட நேர்ந்தமையால் திருவிழந்து இவன் தேய்ந்து போயுள்ளான். அந்த வுண்மையை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கின்ருேம். செயலாளர் சிந்தை திரியினே செல்வம் அயலாய் ஒழியும் அழிந்து. கது. உரிமையாளர் உளம் நோகச் செய்யாதே.