பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.58 திருக்குறட் குமரேச வெண்பா பாய்ச் செய்து வருவர்; வரவே எங்கும் சேமங்கள் இசைந்து வரும்; எல்லாரும் சிறந்து மகிழ்ந்து வாழுவர். உ ல க மக்களுக்குத் தலைமையாய் உயிர்போல் இருப்பவன் அரசன் ஆதலால் எவர்க்கும் யாதும் பழுது நேராதபடி யாண்டும் விழிப்பா யிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவனுக்குப் பிறப்புரிமையாய் நேர்ந்துள்ளது. புரந்துவரும் அளவே புரவலகிைருன். விவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்கு ஆவி யாபவர் அரைசர் ஆதலால் காவல் ஒவுங்கொல்? என்று கண்படான்; மாவல் தானயம் மன்னர் மன்னனே. (சூளாமணி) உலக உயிர்களைக் கண்ணும் கருத்துமா நோக்கி ஒரு மன்னன் பாதுகாத்து வந்துள்ள உண்மையை யாவரும் உவந்து காண இது நயமா உணர்த்தியுளது. காரியம் புரிபவரைக் கருதி நோக்காமல் தலைவன் பராமுகமா யிருப்பின், தம்மை நாடி மேல் நோக்குவார். இல்லை என்று எண்ணி வினை செய்பவர் மடியுறுவர் ஆதலால் அ. து உருதபடி இடையருது கவனித்து வருக என்பார் காள்தோறும் காடுக என்ருர். வினே யாளரை வேந்தன் நாடிவரின் கோடி வருமானம் கூடி வரும்; நாடு முழுவதும் நலமாப் வாழ்ந்து வரும். வேஆலயாள் செய்துவரும் வேலையை வேந்தனேர் காலையும் மாலேயும் கண்டுவரின்-வேலையே வேலியா யுள்ள வியனுலகம் மேன்மையெலாம் பாலியா நிற்கும் பரந்து. இத&ன ஈண்டு ஒர்ந்து சிந்திக்க வேண்டும். விரிந்து பரந்துள்ள உலகத்தைத் தான் ஒருவனே சென்று எப்படிக் கவனிக்க முடியும் ? என்று கவலு. கின்ற அரசனுக்கு இப்படி ஒர் உபாயத்தை உணர்த்தி யருளினர். வினையாளர் செய்து வருகிற செயலே நய மாய்க் கவனித்து வா; யாவும் நலமாய்ச் செழித்துவரும்.