பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ந்து வினை யாடல் 2759 அமைச்சர் முதலிய தன் காரியத் தலைவர்கள் தம் கருமங்களில் கோடாதபடி நாள்தோறும் அரசன் காடி வரின் நாடெல்லாம் செம்மையாய் நீடிவரும் என்பார், வினைசெய்வான் கோடாமை உலகு கோடாது என்ருர், காரகனே நாடி ஒரு ஊரையும், காருகனே நாடி ஒரு குறு நிலத்தையும், மண்டலிகனே நாடி ஒரு மண்டலத் தையும், பட்டவர்த்தனனே நா டி ஒரு தேசத்தையும், இங்ங்னமே வினேக்குரியாரை நா டி அனைத்தையும் கோடாமல் கொண்டு ஆண்டு வருபவர் மன்னர் மன்னவ ராய் மாண்போடு யாண்டும் நீண்டு வருகின்ருர். முயற்சியால் உயர்ச்சிகள் உளவாகின்றன; அந்த முயற்சிகளைச் செய்துவருபவரை உயர்த்தி ஊக்கிவரின் ஆக்கங்கள் உயர்ந்துவரும் ஆதலால் வினையாளரை நாளும் நோக்கி வருவது நல்ல பாக்கியமாய் வந்தது. வினைக்கண் முயற்சி தவருது வினையன் கேண்மை வேருக நினைக்கும் அவன் மற் றவ்வினையி னிங்கும்; பிறரும் அதில் நேரார்; முனைக்கும் வினைஞன் கோடாதே முதிர்நீ ருலகம் கோடாது; த&னப்பின் வைகல் தொறும்நாடிச் சாரும்வினையும் நாடுகவே. (விநாயக புராணம்) தெரிந்து வினையாடல இது தெளித்து வங்துள்ளது. கருமக் காட்சிகள் ஆட்சியின் மாட்சிகளாய் அமைக் துள்ளன. அ வ ற் ைற க் கருதியுணர்ந்து வருபவன் உறுதிநலன்களே யடைந்து உயர்ந்து கொள்ளுகிருன். செயலாளரை அரசன் ஆராய்ந்துவரின் நாடு உயச் வாய் ஒங்கி எவ்வழியும் வியன விளங்கி வரும். இவ்வுண்மை இக்குவாகுபால் உணர வந்தது. ச ரி தம். இவ்வேந்தன் சூரியகுலத் தோன்றல். மனுவின் பேரன். த்ங்தை பெயர் வைவச்சுவதன். இவன் அதிசய அறிவும் அற்புத ஆற்றலும் அரிய பெரிய வர பலங் களும் உடையவன். திருவயோத்தியிலிருந்து அரசு புரிந்த சக்கரவர்த்திகளுள் இவன் தனிமுதல் தலைவன்.