பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2768 திருக்குறட் குமரேச வெண்பா - - சுவைகள் எவ்வழியும் பெருகிச் செவ்வையாய் வந்துள் வாமையால் திவ்விய நூலாய் இது சிறந்து திகழ்கிறது. சுற்றத்தாரைத் தழுவி ஒழுகு என்று விதித்தார்; அவரது பழமை கிழமைகளே முதலில் தெளிவாக விளக்கி ர்ை; அன்புரிமையுடைய அவரால் அரிய பல ஆக்கங்கள் உளவாம் என இதில் உணர்த்தியுள்ளார். நல்ல கிளேகள் அடர்ந்த தரு பலவகை கிலேகளிலும் தழைத்துச் செழித்துப் பனேத்து விளங்கும். அது போல் சிறந்த கிளேஞர்கள் அமைந்த கிருபன் எல்லா வழிகளிலும் வளமாய் உ ய ர் ந் து வனப்புடன் வயங்கி, எங்கும் சிறப்போடு திகழ்வான். நல்ல உறுப்புகளே உற்ற உடல் வலியும் வனப்பும் பெற்று விளங்கும்; உரிமையான உறவினரை உற்றவன் உரமும் திருவும் பெற்று உயர்ந்து விளங்குவான். உரிய இனிய உறவினர் அரிய பெரிய திருவினர் ஆதலால் அவரைப் பிரியமாய்ப் பேணி வருபவன் எவ்வழியும் பெருமை மிகப் பெறுகின்ருன். உற்ற கவலைகளை நீக்கி உரிமையுடன் உதவி புரிய உரியவர் சுற்றத்தாரே. அவரை இனியராகப் பெற்ற வன் இடர் நீங்கி இன்பம் ஓங்கி வருகின்ருன். வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய் மறந் தாஅங்கு அசா அத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் கானக் கெடும். (நாலடி 201) பெற்ற பிள்ளையைக் கண்டவுடனே தாய் பெரு. மகிழ்ச்சி யடைகிருள். உற்றிருந்த பிரசவ வேதனைகள் முற்றும் மறைந்து போகின்றன. அதுபோல் உரிய உறவினரைக் கண்டபோது ஒருவன் துன்பங்கள் நீங்கி இன்பம் மிகப் பெறுகிருன். உவமானம் உவமேயங் களிலுள்ள நயங்கள் ஒர்ந்து சிந்திக்க வுரியன. பிள் ஆள சுற்றத்தார்க்கும்; தாய் அரசனுக்கு ஒப்பாம்.