பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2770 திருக்குறட் குமரேச வெண்பா ' பெரு நீரால் வாரி சிறக்க, இருநிலத்து இட்டவித்து எஞ்சாமை நாறுக, நாருர முட்டாது வந்து மழைபெய்க, பெய்தபின் ஒட்டாது வந்து கிளைபயில்க, அக்கிளே பால் வார் பிறைஞ்சிக் கதிரீன, அக்கதிர் ஏர்கெழு செல்வர் கள நிறைக, அக்களத்துப் போரெலாம் காவாது வைகுக, போரின் உழுகெழும் ஒதை வெரீஇப் பெடையொடு நாரை இரியும் விளைவயல் யாணர்த் தாக அவன் அகன்றலே நாடே - (தகடுக்) இன்னவாறு நாடு நலமாய் வளம் பெருகி வரக் குடிகள் யாண்டும் உளம் உவந்து வாழப் பீடும் திருவும் கெடிது ஓங்கி நிலவப் பெ ரு மேன்மையுடன் இவன் விளங்கியிருந்தான். ஆர்வம் தோய்ந்த சுற்றத்தாரால் இவ்வெற்றித்தார் வேந்தன் கொற்றமும் கோப்பெருஞ் செல்வமும் பெற்று விளங்கினன். அன்புள்ள உறவினர் ஒருவனுக்கு உரிமையாய் அமையின் அவன் ஆக்கம் மிக வுடையய்ை என்றும் இன்பம் மிகப் பெறுவான் என் பதை உலகம் இவனிடம் உணர்ந்து தெளிந்து மகிழ்க் தது. விரிவை மார்க்கண்டேய புராணத்தில் காண்க. அன்பமைந்த சுற்றம் அமையின் அவன்பெரிய இன்பம் அடைவன் இனிது. பிரிய உறவு பெரிய திரு.

  1. =

528 சுற்றம் கலவாச் சுயோதனனும் சிம்மகனும் குற்றமுற்ருர் என்னே குமரேசா-பற்றி அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. (க.) இ-ள். குமரேசா : சுற்றத்தாரோடு கலவாத துரியோதன னும் சிம்மகனும் ஏன் வாழ்விழந்து தாழ்வடைந்தார் : எனின், அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடு இன்றி நீர் நிறைந்து அற்று என்க.