பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ் ல் 277 F சுற்றம் சுற்ருத வாழ்வு தாழ்வாம் என்கிறது. உறவினரோடு உரிமையாய்க் கலந்து வாழாதவன் வாழ்க்கை கரையில்லாத குளத்துள்ளே நீர் நிறைந்தது போல் சீர் சிதைந்து போம். அளவளாவு = ஒன்ருய்க் கலந்து உறவாடுவது. அளவு = கிலேமை அளாவுதல் = உசாவி விசாரித்தல். குனவளா = குளத்தின் உள்ளே வ8ளங்து பள்ளமா கபிருக்கும் பகுதி. அ.தாவது நீர் பரங்து கிற்கும் இடம். கோடு = கரை. குளத்தைச் சுற்றி வட்டமாய் வ8ளத் திருப்பது ஆதலால் கோடு எனக் குறிக்க வந்தது. குளத்துன் நீர் நிறைந்து கிலேத்து நிற்றற்குக் கோடு ஆதரவா யிருக்கின்றது. பயிர்க்கு வேலிபோல் நீர்க்குக் கரை. உரிய கரைபோல் பெரிய கிளே அரிய பல வளங்களே அரசுக்கு அருளி வருகிறது. உறவினருடைய வாழ்க்கை வசதிகளேயும் கிலேமை தலைமைகளேயும் சேம லாபங்களேயும் அரசன் அன்புடன் விசாரித்துவரின் அந்த விசாரனே அவர்க்குப் பெரிய இன்பமாம். தம்பால் மன்னன் வைத்துள்ள அன்புரிமை களேக் கருதியுருகி எவ்வழியும் அவனுக்கு உதவிபுரிந்து வர உறுதி பூண்டு அவர் ஊக்கி நிற்பர். அந்த கிலே அரசுக்குப் பெரிய ஆக்கமாம். சுற்றத்தார் பால் அன்பு தோய்ந்துவரின் அவ்வேந்தன் வெற்றித்தார் ஏந்திவரும். உரியவன் பரிவுற உற்றவர் பணிவுற்று வருகின்ருர். இவன் பரிவு காட்ட வில்லையானல் அவர் உரிமை காட்ட மாட்டார். உள்ளம் திரிந்து வேறு படுவர். படவே அரசு வலி குறைந்து போம்: நலிவுகள் நேர்ந்து வரும். சுற்றத்தாரைத் தழுவி ஒழுகிவரின் ஆக்கம் பெருகி வரும் என்று முன்னம் குறித்தார்; தழுவாது விடின் செல்வம் சிதைந்துபோம் என இதில் உரைத்துள்ளார். கிலைகுலைவ் தெளிவாய்த் தெரிய உவமை வந்தது. குறித்த கருத்தை நவமா நன்கு விளக்கி வருதலால் உவமானம் ஒளி விளக்காய் எங்கும் நிலவியுளது.