பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2780 திருக்குறட் குமரேச வெண்பா ஈதலும் இனிய சொல்லும் ஒருவன் ஆதரவோடு இயற்றிவரின் பலவகையான சுற்றத்தாரால் அவன் என்றும் நன்கு குழப் பெறுவான். ஆற்றின் என்றது அவ்வாறு இருவகையும் செய்து வருவது பெரிதும் அரிது என்பது தெரிய வந்தது. ஆற்றுதல்=உறுதியாய் ஊக்கிச் செய்தல். இனிய வார்த்தையினும் .ெ கா ைட எவரையும் ரைந்து வசப்படுத்தும் ஆதலால் அங் கிலேமையை உணர இங்கே அது தலைமையாய் நிலவி கின்றது. அடுக்கிய = அடுத்துத் தொடர்ந்த. தந்தை வழியிலும் தாய் வழியிலும் தொடர்ந்து படர்ந்து வந்துள்ள கிளேஞர்களேத் தொகுத்துக் காண அடுக்கிய சுற்றம் என்று குறித்து உரைத்தார். உறவினர் பெருகி வரின் அவ்வரவால் ஒருவனுக்கு மதிப்பும் பெருமையும் மருவி வருகின்றன. அரும்பு பிஞ்சு காய் கனிகள் நிறைந்த மரம் சிறந்து விளங்குவது போல் மிக்க ஒக் கல் க ளே உடையவனும் உலகில் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குகிருன். வறிய ராயினும் பெரிய கிளேகளேயுடையவர் பெரு மை யுறுகின்ருர். கொடிக்குச் சுரை கனத்திருக்குமா ? என்னும் முதுமொழி எளியரும் பெரிய கிளேஞரை உரிமையுடன் உவந்து பேணுவர் என்பதை உணர்த்தி கின்றது. இயற்கை உரிமை எவர்க்கும் உவப்பை விளேத்து உறுதிநலன்களே அருளி வருகிறது. அடுக்கல் மலைநாட! தற்சேர்ந் தவரை எடுக்கலம் என்னுர் பெரியோர்;-அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. (நாலடி 203) தன்னைச் சேர்ந்த சுற்றத்தாரை எவ்வகையிலும் உரிமையோடு ஆதரித்து வருவது உயர்த்தோர் இயல் பாம் என இது உணர்த்தியுளது. இதில் குறித்துள்ள உவமையைக் கூர்ந்து காண்பவர் மனிதனுக்கும் சுற்றத்